Yash Raj Films release the next song from Saiyaara, Dhun, that reunites the dream musical trio of Arijit Singh, Mithoon & Mohit Suri!

106

The blockbuster musical trio of Arijit Singh, Mithoon and Mohit Suri, who have created some of the biggest historic chartbusters in the Hindi film industry including Tum Hi Ho from Aashiqui 2,
are back for Saiyaara’s next song Dhun which has been released today by Yash Raj Films!

Mohit shares a spectacular musical journey with Mithoon spanning for over 2 decades now. They started their collaboration in 2005 when they did Zeher & Kalyug. Since 20 years, Mithoon & Mohit have worked on the biggest film music albums of our times like Murder 2, Aashiqui 2, Ek Villain, Hamari Adhuri Kahaani, Half Girlfriend, Malang and now Saiyaara.

Before coming together in Saiyaara, Arijit Singh, regarded as an all-time best singer that India has ever produced, has collaborated with Mohit Suri on several soulful hits like Tum Hi Ho, Chahun Main Ya Naa, Hum Mar Jayenge, etc from Aashiqui 2, to Humdard in Ek Villain, to Hamari Adhuri Kahani title track, to Phir Bhi Tumko Chaahunga in Half Girlfriend, to Chal Ghar Chalen in Malang.

The much-anticipated romantic film, Saiyaara, brings together Yash Raj Films and Mohit Suri, both known for creating timeless love stories, for the first time! Saiyaara has so far garnered unanimous praise for delivering an intense love story with debutants who share infectious chemistry and brilliant acting skills.

The film launches Ahaan Panday as a YRF hero. The studio has handpicked Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the next YRF heroine.

Saiyaara is buzzing these days as the most anticipated young romantic film of our times. It has delivered the best album of the year with all songs from Saiyaara, Jubin Nautiyal’s Barbaad, Vishal Mishra’s Tum Ho Toh, Sachet-Parampara’s Humsafar and now Dhun have captured audience attention and are making waves on the musical charts of India!

YRF, in its 50 year history, is known for giving India some of the cult romantic films of all time primarily directed by Yash Chopra and Aditya Chopra. Mohit Suri, who is currently in his 20th year in cinema, has also directed some of the most favourite romantic films like Aashiqui 2, Malang, Ek Villain, etc.

Saiyaara is produced by the company’s CEO Akshaye Widhani and it is set to release on July 18, 2025 in theatres worldwide.

 

“மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை எதிர்பார்க்கிறார்கள்!” – சையாரா படத்தின் அடுத்த பாடலான ‘துன்’ பாடலுக்காக மூவரும் ஒன்றாக இணைந்தது குறித்து மோஹித் சூரி.

 

அரிஜித் சிங், மிதூன் மற்றும் மோஹித் சூரி என மூவரும் நாளை வெளியாகவுள்ள சையாராவின் அடுத்த பாடலான ‘துன்’ பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த மூவரும் ஹிந்தி திரைப்படத்துறையில் வரலாற்று அளவில் வெற்றி பெற்ற பாடல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர்.இதில் ஆஷிகி 2 படத்திலிருந்து ‘தும் ஹி ஹோ’ பாடலும் அடங்கும்.மேலும், இந்த கூட்டணியில் உருவாகும் இசைக்காக மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை மோஹித் விரும்புகிறார்.

மோஹித் கூறுகையில், “நட்சத்திரங்கள் இணையும்போது, ​​ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். என் வாழ்க்கையில் முதலில் மிதூனையும் பின்னர் அரிஜித் சிங்கையும் கொண்டு வந்ததற்கு நான் நட்சத்திரங்களை பாராட்டுகிறேன்.ஏனென்றால் நம் நாட்டின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக்கூடிய இந்த இரண்டு இசை கலைஞர்களுடன் எனது சிறந்த இசையை உருவாக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.”

மிதூனுடன் 2 தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் அவரது அற்புதமான இசைப் பயணத்தைப் பற்றி மோஹித் கூறுகையில், “மிதூனும், நானும் 2005ம் ஆண்டில் ஜெஹர் & கல்யுக் திரைப்படத்தில் இசையமைத்ததிலிருந்து எங்கள் பயணம் தொடர்கிறது. மிதூனை அறிந்து, அவருடன் இசையை உருவாக்கி, அவரது புத்திசாலித்தனமான மனதைப் பாராட்டி 20 ஆண்டுகள் ஆகிறது. 2005ம் ஆண்டில் இருந்து, மிதூனும் நானும் மர்டர் 2, ஆஷிகி 2, ஏக் வில்லன், ஹமாரி அதுரி கஹானி, ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்ட், மலாங், இப்போது சையாரா .எங்கள் படைப்புகளைப் பார்ப்பதில் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக நாங்கள் ஒன்றாக உருவாக்கிய காதல் பாடல்கள்” .

“எனவே, மிதூனும் நானும் இணையும் போதெல்லாம், ஒரு சிறந்த பாடலை வழங்க எங்களிடமிருந்து பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும்.மேலும் அந்த அழுத்தத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். இந்த எதிர்பார்ப்பு தான் புதிதாக ஒன்றை உருவாக்க எங்களை தூண்டுகிறது.பேசப்பட வேண்டிய மக்களால் விரும்பப்படும் ஒரு பெரிய பாடலை வழங்க எங்களை தூண்டுகிறது.”

இந்திய சினிமாவில் சிறந்த பாடகராகக் கருதப்படும் அரிஜித் சிங்குடனான அவரது ஒத்துழைப்பைப் பற்றி மோஹித் கூறுகையில் , “அரிஜித் சிங் இந்த வாழ்நாள் முழுவதும் போற்றத்தக்க அற்புதமான நினைவுகளைத் தந்த ஒரு பாடகர். ஆஷிகி 2 இன் தும் ஹி ஹோ, சாஹுன் மைன் யா நா, ஹம் மர் ஜாயேங்கே போன்ற பாடல்களிலிருந்து ஏக் வில்லனில் ஹம்டார்ட் வரை, ஹமாரி அதுரி கஹானி டைட்டில் டிராக் , ஹாஃப் கேர்ள்ஃபிரண்டில் ஃபிர் பி தும்கோ சாஹுங்கா , மலாங்கில் சல் கர் சாலன் வரை அரிஜித் பாடிய பாடல்கள் மட்டுமல்ல, அவை என் இதயத்தின் துண்டுகள்”.

நாங்கள் மூவரும் ஒன்றாக இணையும்போது மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள் என்றும், சையாராவில் அந்த அழுத்தத்தை அவர் அனுபவிக்கிறார் என்றும் மோஹித் கூறுகிறார்.

“இயற்கையாகவே, மிதூனும் அரிஜித்தும் நானும் ஒன்றாக இணையும்போது, ​​மக்கள் மறக்க முடியாத ஒரு பாடலைக் தருவோம் என எதிர்பார்கின்றனர் என்பதை நாங்கள் அறிவோம், அந்த எதிர்பார்ப்பை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் மூவரும் மீண்டும் சையாரா படத்தில் இடம்பெற்ற துன் பாடலுக்காக இணைகிறோம்.இது எங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்த பாடல். பிரபஞ்சம் எப்படியோ எங்கள் மூவரையும் ஒவ்வொரு முறையும் ஒன்றிணைத்து மிகவும் எளிமையான மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சிபூர்வமான பாடலை உருவாக்குகிறது, ”

துன் பாடலைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், “துன் என்பது காதல் வாழ்க்கையில் போராட்டத்தைக் கொண்டாடும் ஒரு பாடல், மேலும் உண்மையான போராட்டம் யாருக்கும் அனைத்து தடைகளையும் கடக்க உந்துதலை வழங்கும். துன் என்பது ஒருபோதும் கைவிடாத உணர்வு ,எல்லோரும் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்.”

மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் படமான சையாரா , காலத்தால் அழியாத காதல் கதைகளை உருவாக்குவதில் பெயர் பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியை முதல் முறையாக ஒன்றிணைக்கிறது.

இந்தப் படத்தில் அஹான் பாண்டே கதாநாயகனாக அறிமுகமாகிறார் கதாநாயகியாக அனீத் பத்தாவை (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் தனது அற்புதமான நடிப்பால் இதயங்களைக் கொள்ளை கொண்டவர்) என்பவர் நடித்துள்ளார்.

நம் காலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இளம் காதல் படமாக சையாரா படம் உள்ளது . இதுவரை இந்த இசை ஆல்பத்தில் இருந்து நான்கு பாடல்களான சையாரா , ஜூபின் நௌடியாலின் பர்பாத், விஷால் மிஸ்ராவின் தும் ஹோ தோ & சச்செட்-பரம்பராவின் ஹம்சஃபர் ஆகியவை இந்திய இசை அட்டவணையில் அலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

சையாரா பட பாடல்களைத் தவிர, இந்த படத்தின் தலைப்பான சையாராவும் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
சாயாரா படத்தை யாஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார், இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com