SUNNY LEONE STARRER HORROR-COMEDY WITH HISTORICAL BACKDROP TITLED ‘OH MY GHOST’ (OMG) SECOND SCHEDULE WRAPPED UP IN MUMBAI
VAU MEDIA ENTERTAINMENT & WHITE HORSE STUDIOS D. VEERA SAKTHI & K. SASIKUMAR PRESENTS
SUNNY LEONE STARRER HORROR-COMEDY WITH HISTORICAL BACKDROP TITLED ‘OH MY GHOST’ (OMG) SECOND SCHEDULE WRAPPED UP IN MUMBAI
Ever since the announcement on Sunny Leone’s debut movie in Tamil industry titled ‘Oh My Ghost’ was made, there has been more curiosity mounting upon the project. Although, the first leg of shoot was completed a few days ago, the crew was looking excited to have the gorgeous Sunny Leone join the sets. Apparently, the second leg of shoot that commenced in Mumbai has been successfully completed in a shorter period, with the entire cast and crew strictly following the COVID protocol and norms. This schedule involved the major portions involving Sunny Leone being shot.
Director R.Yuvan says Omg means “oh my ghost” this is completely fun and entertainment movie.this film story based on periodic type first time we planned horror comedy in periodic background.sunny Leon character playing major attractions in this film which is fresh and lead role in this film.
Oh My Ghost is produced by D. Veera Sakthi and K. Sasikumar of VAU Media Entertainment and White Horse Studios. Sindhanai Sei movie fame R. Yuvan has written and directed this movie.Sunny Leone is playing the lead character alongside Satish, Yogi Babu and Darsha Gupta are the others in importan roles. The other actors are Mottai Rajendran,Ravi Maria, Ramesh Thilak, Arjunan, Thanga Durai, and many more. Javed Riaz is the music director, and Deepak D. Menon is the cinematographer.
VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன் நடிக்கும், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG), படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு, மும்பையில் இனிதே நிறைவு பெற்றது !
தமிழில் நடிகை சன்னி லியோன் நடிப்பில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG) அறிவிக்கப்பட்டதிலிருந்தே படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மிக சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை சன்னி லியோன் இணைந்ததில், படக்குழு மிகப்பெரும் உற்சாகத்தில் இருந்தது. இந்நிலையில் மிகக்குறுகிய காலத்தில் படக்குழுவினரின் அயராத உழைப்பில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு மும்பையில் இனிதே நிறைவு பெற்றுள்ளது. கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும், முறையாக கடைப்பிடிக்கப்பட்டு நடத்தப்பட்ட இப்படப்பிடிப்பில், நடிகை சன்னி லியோன் நடித்த முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
இயக்குநர் யுவன் கூறியதாவது..
OMG என்பது “ஓ மை கோஸ்ட்” என்பதன் சுருக்கமே, இப்படம் முழுக்க, முழுக்க ஒரு கமர்ஷியல், பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். இப்படம் வரலாற்று பின்னணி கதைகளத்தை கொண்டது. முதல் முறையாக வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடியை செய்துள்ளோம். சன்னி லியோன் பாத்திரம் படத்தின் மிக முக்கியமான முதன்மை பாத்திரமாக, ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும் என்றார்.
“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்படத்தினை VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.