The release of any movie every film gains significance during the time of release, and there are few films which gain significance during the process of making, there are some films which gain significance during the announcement, but only handful of films maintain the, momentum from the day of its inception to the release. ‘Kutti story ‘ produced by Dr Ishari K Ganesh on behalf of Vels film international is a film that sustained the momentum right from the announcement. No surprises though as the film possess the cream of the directors from this part of the land and is produced by a passionate visionary producer who ever think on betterment of the industry’s trade and good will and turns to be distributor too. The advent of anthology had proved to be great hit with the some recent releases which were accepted and appreciated by the audience worldwide. “It is to be noted that “Kutti stori ” with a mammoth cast, and the most talented technical crew gains more significance as it awaits a theatrical release to provide the audience the new feel of anthology in the big screens.
“Kutti story a four film anthology that works on human emotions is directed by Gautham Vasudev Menon, Director Vijay, Venkat Prabhu and Nalan Kumarasamy. All these directors over the period of time had gained plenty of popularity and good will among the masses with their precision in film making and the amalgamation of these talents make this film a great prospect” says Dr Ishari K Ganesh with pride. He also adds “Post pandemic the immediate responsibility of any maker is to support the theatres and me being an integral part of the commercial cinema in this trade is very particular on a theatre release. With the public showing their loyalty to the theatre I feel it is the film industry’s gesture of reciprocacy to the audience to offer them films of substance. My company Vels film international is ever committed to this and we are glad to announce the release date of “Kutti story” as February 12th on the eve of Valentine ’s Day. We our selves are releasing the film in our banner with the best of support from our traditional trade friends”.
If you are lover of good cinema, here it is …”Kutti story” is slated for a big release on Feb 12th.
12 பிப்ரவரி 2021 அன்று பிரமாண்டமாக வெளியாகிறது “குட்டி ஸ்டோரி” !
எல்லா திரைப்படங்களும் வெளியீட்டின் போது ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் சில படங்கள் படப்பிடிப்பிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஆனால் வெகு சில படங்களே படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வெளியீடு வரை பெரும் உற்சாகத்தை அனைவரிடத்திலும் உண்டு செய்யும். அந்த வகையில் Dr. ஐசரி K கணேசன் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் வழங்கும் குட்டி கதை அப்படியானதொரு படைப்பாக உருவாகிறது. தமிழ் மண்ணின் மிகச்சிறந்த இயக்குநர்கள் இணைந்து உருவாக்க, தரமான வகையிலும், விநியோக தளத்தில் லாபம் தரும் வெற்றி படங்களாக தொடர்ந்து தரும், Dr. ஐசரி K கணேசன் தயாரிப்பில் உருவாகும் “குட்டி ஸ்டோரி” இத்தனை எதிர்பார்ப்பை உருவாக்குவது என்பது ஆச்சர்யாமான விஷயம் இல்லை. ஆந்தாலஜி வகை படங்கள் ஒரு புதிய வடிவத்தினை மாற்றனுபவத்தை தருகிறது. சமீபத்திய ஆந்தாலஜி படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் பெரும் நட்சத்திர பட்டாளமும், உயர்தர தொழில்நுட்ப குழுவினர் இணைந்து பணியாற்றியுள்ள “குட்டி ஸ்டோரி” திரைப்படம், ஆந்தாலஜி வகையில், ரசிகர்களுக்கு பிரமாண்டமான ஒரு புதிய அனுபவத்தை திரையரங்கில் தரவுள்ளது.
மனித மனங்களின் மென்னுணர்வுகளை மையப்படுத்திய நான்கு கதைகளை கூறும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தினை இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கியுள்ளனர். இந்த இயக்குநர்கள் அனைவருமே தங்கள் தனித்தன்மை மிக்க திறமையால் தரமிகு படைப்புகளை தந்து தமிழ் சினிமாவை முன்னெடுத்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றவர்கள் என பெருமையுடன் கூறுகிறார் Dr. ஐசரி K கணேசன். மேலும் அவர் கூறும்போது… இந்த நீண்ட பொது முடக்க காலத்திற்கு எந்த ஒரு தயாரிப்பாளராகவும் முதல் கடமை என்பது திரையரங்குகளை ஆதரிப்பதே ஆகும். அதிலும் கமர்ஷியல் சினிமாவின் அங்கத்தில் பங்கு வகிக்கும் நான் திரையரங்கு வெளியீட்டை ஆதரிப்பது முக்கியமான கடமை ஆகும். ரசிகர்கள் தியேட்டர்கள் மீதான தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ள இந்த தருணத்தில் அவர்களுக்கான படங்களை தியேட்டரில் வெளியிடுவது நமது அனைவருடைய பொறுப்பு ஆகும். இதனை முன்னெடுத்து எங்கள் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் வழங்கும் “குட்டி ஸ்டோரி” 12 பிப்ரவரி 2021 அன்று காதலர் தின கொண்டாட்டமாக, வெளியாகும் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன். எங்கள் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் குழு நண்பர்களின் ஆதரவில் இப்படத்தினை திரையரங்கில் வெளிடுகிறோம்.
நீங்கள் உன்னத சினிமா ரசிகரெனில் இதோ உங்களை மகிழ்விக்க வருகிறது “குட்டி ஸ்டோரி” பிப்ரவரி 12 முதல்.