நிஜ நண்பர்களை நிழல் எதிரிகளாக மாற்றிய ‘இயல்வது கரவேல்’

196

எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் படம் இயல்வது கரவேல். அறிமுக இயக்குனர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் கதிருக்கு வில்லனாக மாஸ்டர் மகேந்திரன் நடிக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் நிஜத்தில் கதிரும் மாஸ்டர் மகேந்திரனும் திக் பிரண்ட்ஸ். இவர்கள் நிஜத்தில் எப்படிப்பட்ட  நெருங்கிய நண்பர்கள் என்பது இவர்களுடன் பழகி வரும் இவர்களின் நட்பு வட்டாரத்தில் ரொம்பவே பிரசித்தம்

சினிமாவில் எத்தனையோ படங்களில்  ஒருவருக்கொருவர் விறைப்பும் முறைப்புமாக மல்லுக்கட்டும் ஹீரோ வில்லன்கள் நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாக இருப்பதை கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம் .

இப்படி நிஜத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் திரையில் எதிரிகளாக மாறுவது படத்தின் மீதான சுவாரசியத்தை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அதிலும் குறிப்பாக மாஸ்டர் மகேந்திரனை இதுவரை பார்த்திராத ஒரு புதிய கோணத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் இந்தப்படத்தில் பார்க்கலாம் என திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com