தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: திரைப்பட இயக்குனர் ஆதிராஜன் எழுதிய சிறப்பு பாடல் வெளியீடு
https://drive.google.com/file/d/1_8Hajw4ysnu_F_uMHx5c5zPQX0YKKBot/view?usp=drive_web
தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு:
திரைப்பட இயக்குனர் ஆதிராஜன் எழுதிய சிறப்பு பாடல் வெளியீடு
தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இந்த கும்பாபிஷேக விழா வை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த கோவிலின் சிறப்பையும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தையும் தமிழர்களின் பெருமையையும் போற்றும் வகையில் திரைப்பட இயக்குனர் ஆதிராஜன் ஒரு சிறப்பு பாடலை எழுதி வீடியோவாக தயாரித்து வெளியிட்டிருக்கிறார். சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன், ஏற்கனவே சிலந்தி, அருவா சண்ட, ராத்ரி, அர்ஜுன், நடிகையின் டைரி உள்ளிட்ட சில படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். சிவபெருமானைப் போற்றும்”ஓம் சிவாய நம சிவாய…”என்று தொடங்கும் இந்த பாடல் அவர் எழுதிய பத்தாவது பாடல் ஆகும். இந்த பாடலுக்கு திரைப்பட இசையமைப்பாளர் பி.சி. சிவன் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை அஜய் ஷ்ரவன் பாடியிருக்கிறார். யு.முத்தையன் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். இந்தப் பாடலை க்ரீன் மேஜிக் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
SONG LYRICS
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நம சிவாய
ஓம் சிவாய நம சிவாய
ஓம் சிவாய நம சிவாய
ஆயிரம் ஆண்டு தாண்டியும்
ஆகாயம் வியந்து பார்க்கும்
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நம சிவாய
தஞ்சை கோவில் குடமுழுக்கை தரணியெல்லாம் பேசி தீர்க்கும்
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நம சிவாய
ராஜராஜ சோழனின்
ராஜாங்கம் செய்த சாதனை
பூமி எங்கும் தமிழர் புகழை
போற்ற வைத்தாய் ஈசனே
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நம சிவாய
ஓம் சிவாய நம சிவாய
ஓம் சிவாய நம சிவாய
காவிரி கரை ஓரத்தில்
சாட்சியாய் நின்றாய்
ஆதி தமிழனின்
அறிவும் நீ என
சொல்லியே சென்றாய்
வாரணம் ஐந்தாயிரம்
சேர்ந்து கட்டிய ஆலயம்
விந்தையில் நமை ஆழ்த்திடும் விஞ்ஞான அதிசயம்
சங்கரா… சாம்பவா…ஈஸ்வரா
நிழல் விழாமல் வானுயர்ந்து நின்றாய்
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நமசிவாய
கோடிக் கண்கள் வியந்து பார்க்கும் கோவில் சிற்பங்கள்
தேடி பார்த்தால் தெரியுமோ
உயர் கலையின் நுட்பங்கள்
ஓராயிரம் ஆண்டுகள் குடமுழுக்கு
இங்கு நடக்குதே
நூறாயிரம் தாண்டியும்
உன் திருப்பணி தொடருமே
சங்கரா… சாம்பவா… ஈஸ்வரா கருவூரார் வழியில் உன்னை சரணடைந்தோம்
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நமசிவாய
ஓம் சிவாய நமசிவாய