பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் ” பேய்மாமா ”
இந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா,ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – MV.பன்னீர்செல்வம்.Bsc.D.F.Tech
இசை – ராஜ் ஆர்யன்
கலை – R.ஜனார்த்தனன்
எடிட்டிங் – பிரீத்தம்
வசனம் – சாய் ராஜகோபால்
ஸ்டண்ட் – தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ்
நடனம் – நோபல்
பாடல்கள் – ஷக்தி சிதம்பரம், ஏக்நாத்
தயாரிப்பு மேற்பார்வை – ஷங்கர்.ஜி
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி – மணவை புவன்
தயாரிப்பு – விக்னேஷ் ஏலப்பன்
கதை, திரைக்கதை, இயக்கம் – ஷக்தி சிதம்பரம்
படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது..
வடிவேலுவை இரட்டை வேடங்களில் நடிக்க வெச்சு இந்த படத்தை எடுக்கலாம் என்று முதலில் யோசித்திருந்தேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை. அப்போதான் இம்சை அரசன் படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை, ஆனால் அந்த செய்தி மூலமாக நாம ஏன் யோகிபாபுவை இந்த படத்தில் நடிக்க வைக்க கூடாதுன்னு தோணுச்சு அவரிடம் பேசினேன், இது வடிவேலுவுக்கு பண்ணின கதை’ன்னு சொன்னதும் முதலில் தயங்கினார் பிறகு ஓகே சொல்லிவிட்டார்.
இந்த படத்தில் யோகிபாபு ஒரு பிக் பாக்கெட் அடிக்கிறவர். அவரோட வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள் தான் படம். இதில் கொரோனா மாதிரி ஒரு விஷயமும் இருக்கு.வெளிநாட்டு மருத்துவக் கம்பெனியுடன் சேர்ந்துக்கிட்டு இங்கே இருக்குற ஒருசிலர் ஒரு வைரஸை மக்களிடையே பரப்புகிறார்கள். அந்த வைரஸுக்கான மருந்தும் அவர்களிடம் இருக்கும். ஆனால் அதை உடனே வெளியிடாமல் நோய் அதிகமாக பரவவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தலைமுறை தலைமுறையாக சித்த மருத்துவ சேவையை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக்குழு அந்த சித்த மருத்துவக் குடும்ப்பதையே கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களது ஆவி யோகிபாபுவுடன் சேர்ந்து எதிரிகளை பழிவாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றினார்கள், என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு 2019 நவம்பர் மாதத்திலேயே முடித்துவிட்டோம். ஆனால் பிப்ரவரி, மார்ச்சில் தான் கொரோனாவே வந்துச்சு, இப்போ இருக்கிற நிலைமையும் எங்கள் கதைக்களமும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. படம் நிச்சயமாக படம் ( OTT ) ஒன்லி தியேட்டர் தான் என்கிறார் ஷக்திசிதம்பரம்.