Ramya Nambeesan 15-02-20

The actress says, “My journey with ‘Ramya Nambeesan Encore’ has been literally satisfying as I find myself imbibed to the love and warmth of people all over the world for my works. This indeed propelled me to proceed ahead and bring up something innovative. With a space like YouTube that offers me creative freedom, I have attempted making a short video titled ‘The Hide (UN) Learn’, which actually marks my debut as a director. The premise revolves around the crisis that women of our contemporary times face in the Indian society. Moreover, I am so much excited to present this as the first video in the newly launched YouTube channel, which is exclusively dedicated for Tamil contents. I believe, this short video wouldn’t be a stereotypical means of projecting the issue alone for it has some solution discussed towards the end as well. This YouTube channel will not feature short movies, but also have music, dance and many other diversified art forms through which I can express my creative potentials.”
Conceived, narrated and directed by Ramya Nambeesan, ‘The Hide (UN) – Learn’ is produced by Ramya Nambeesan Encore N Poetic Stories. Apart from handling these narrative and technical departments, Ramya Nambeesan has played the lead role alongside Sshritha Shivadas. Badri Venkatesh has written dialogues for this short video, which has cinematography handled by Neil Dcunha, musical score by Ramya Nambeesan’s brother Rahul Subramaniam and editing by Rojin Thomas.
“The Hide ( UN )learn” ரம்யா நம்பீசன் இயக்கத்தில் முதல் குறும்படம் !
இது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறியதாவது…
“Ramya Nambeesan Encore” என இணையம் வழி தொடங்கியிருக்கும் எனது இந்தப் பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. உலகில் உள்ள அனைவருடனும், எனது அன்பை, உணர்வை பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. எனது பார்வையை, எனது உலகத்தை, புதுபுது ஐடியாக்களை, பல புதுமையான விஷயங்களை முயன்று பார்க்க மிகப்பெரும் சுதந்திதரம் இந்த Youtube தளத்தின் மூலம் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த தளத்திற்காக முதல் வீடியோவாக The Hide ( UN ) learn எடுக்க ஆரம்பித்தேன். இது இயக்குநராக எனது முதல் முயற்சி. இந்த வீடியோ இன்றைய நவநாகரீக உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, இந்திய சமூகத்தில் அவர்களின் நிலையை சொல்லக்கூடியது. இந்த வீடியோ எனது முதல் படைப்பாக தமிழுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட எனது Youtube தளத்தில் வெளியானது எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த வீடியோ வழக்கமானா வீடியோ போல் வெறும் பிரச்சனைகளை மட்டுமே பேசக்கூடிய ஒன்று அல்ல. இறுதியில் பிரச்சனைகளுக்கான தீர்வை பற்றி விவாதிக்கவும் செய்வதாக இருக்கும். எனது இந்த Youtube தளம் இது போல் குறும்படஙகள் மட்டுமல்லாது, பாடலகள், நடனம் மற்றும் கலைவடிவங்கள் பலவற்றையும் முயற்சிக்கும் ஒன்றாக இருக்கும் என்றார்.
Ramya Nambeesan Encore N Poetic Stories தயாரித்துள்ள
“The Hide ( UN ) learn “ வீடியோவை ரம்யா நம்பீசன் கருவாக உருவாக்கி, தன் குரலில் விவரித்து, இயக்கியுள்ளார். மேலும் தொழில்நுட்ப கலைஞராக மட்டுமல்லாமல் ஸ்ரிதா ஷிவதாஸ் உடன் இணைந்து இந்த வீடியோவில் நடித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இந்த வீடியோவிற்கு வசனம் எழுதியுள்ளார். நீல் சுன்னா ஒளிப்பதிவு செய்ய ரோஜின் தாமஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ரம்யா நம்பீசனின் சகோதரர் ராகுல் சுப்பிரமணியம் இந்த வீடியோவிற்கு இசையமைத்துள்ளார்.