வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதை ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “

511

Mirachi Movie Gallery

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதை
ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “


டேக் ஓகே  சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் ” மிரட்சி ”  ஜித்தன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர்  ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம் சவாலான  வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை  ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார்   ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  –  ரவி.V

எடிட்டர்  –  N.ஹரி

இசை – ஆனந்த்

பாடல்கள், வசனம்   –  N.ரமேஷ்

தயாரிப்பு  –  P.ராஜன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – M.V.கிருஷ்ணா

படம் பற்றி இயக்குனர் M.V.கிருஷ்ணா கூறியதாவது..

மிரட்சி இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட படம்.இதுவரை வெளியான சைக்கோ திரில்லர் படங்கள் எல்லாமே ஒரே சீரியஸ் மூடில் மட்டுமே படமாக்கப் பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த வகையான சீரியஸ் மூட் அதிகமாகவும், மிரட்டலாகவும் இருந்தாலும், இளமையான, அழகான காதலும், தரமான காமெடிகளும், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளும், மனதை மயக்கும் இசையில் தெளிவான பாடல்களும் இடம்பெற்றிருக்கும்.

தன காதலுக்கு எதிராக இருக்கும் அம்மாவை மீறி தன்னை உயிராக நேசிக்கும் நாயகனின் காதலை ஏற்க தன்னுள் மனப்போராட்டம் நடத்துகிறாள்.அந்த நிலையில் பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறாள், இறுதியில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதே திரைக்கதை. கோவாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டுதான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதன் கிளைமாக்ஸ் காட்சிகளை மூன்று நாட்கள் 72 மணி நேரம் தொடர்ந்து படமாக்கினோம். ஜித்தன் ரமேஷ்  இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.
படம் முழுக்க முழுக்க கோவாவில் படமாக்கி இருக்கிறோம்  என்கிறார் இயக்குனர் V.M.கிருஷ்ணா  

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com