Yogi Babu in Takkar

Featuring Divyansha Kaushik in female lead role, the film revolves around two egoistic characters, which are always highly tempered. Their lives go through unheralded transformations after coming across each other.
Produced by Sudhan Sundaram and Jayaram for Passion Studios, the film’s star-cast comprises of Siddarth, Divyansha Kaushik, Abhimanyu Singh, Yogi Babu, Munishkanth and RJ Vignesh. Vanchinathan Murugesan is handling cinematography and Nivas K Prasanna is composing music with Gowtham G.A. taking care of editing.
தற்போதைய தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் யோகிபாபுவின் பெயர் தவறாது இடம்பெற்று விடுகிறது. தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி இருக்கிறார். தனக்கே உரித்தான காமெடி பஞ்ச்களால் கவரும் அதே வேளையில் திரைப்படங்களில் முழு நாயகனாகவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் G கிரிஷ் இயக்கும் “டக்கர்” அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. அவரது கேரக்டர் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் அதே நேரம், வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டாவாகவும் இருக்கும். திரையில் அப்பா மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும் என்கிறார் இயக்குநர்.
சித்தார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் நாயகியாக நடிக்கிறார். இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் “டக்கர்”.
ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், அபிமன்யு சிங், யோகிபாபு, முனீஷ்காந்த், RJ விக்னேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். கௌதம் G A படத்தொகுப்பு செய்கிறார்.