இயக்குனர் சீனுராமசாமி நடிகர் விஜய்சேதுபதிக்கு எழுதிய பிறந்த நாள் கவிதை பாடலானது…..

552

 

கவிதை பாடலானது

நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாள் பரிசாக அவரை வாழ்த்தி இயக்குநர் சீனு ராமசாமி எழுதிய கவிதை பாடலாக பதிவானது

“நான் இதை எழுத பத்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால்
எழுதியது என்னவோ அரை மணி நேரத்தில் சேதுவின் நற்குணத்தை செய்து வரும் நற்காரியங்களை நினைத்ததும் வரிகள் உள்ளத்தில் நெகிழ்ந்து அன்பாக நேசமாக கண் நேரத்தில் வந்தது “என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. இக்கவிதை படித்த இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இதை பாடலாக்கலாம் என்று கூறி மெட்டமைத்திருக்கிறார்.இது விரைவில் வெளிவரும் என்கிறார் இயக்குனர்.

கவிதை சீனு ராமசாமி
இசை : என்.ஆர்.ரகுநந்தன்

ரசிகனை ரசிக்கும்
ரசிகனே வா
ரசித்தவர் மனங்களின்
தலைவனே வா
இலக்கணம் எமக்கில்லை
என்றவன் வா
தலைக்கணம் தமக்கில்லை
உணர்ந்தவன் வா

மக்கள் செல்வா
உந்தன் மங்காதப் புகழ் சொல்லவா
மக்கள் செல்வா
இந்த மண்ணின் மகன் நீ அல்லவா

தர்மத்தின் தலைமகன்
தந்ததை மறப்பவன்
பெற்றதை நினைப்பவன்
பெருமைகள் சேர்ப்பவன்

பசித்தவர் அறிந்தே
தன் இரைப்பையில் இருந்தே
எடுத்து தருபவன்

உண்பதை தந்தான்
மிச்சத்தை உண்டான்
தன் மனம் அறிந்தான்
அவ மானம் கடந்தான்

திரையில் நடிப்பவன்
தரையில் நடப்பவன்
தாயை போலவன்
தந்தை குணத்தவன்

முயன்றவர் தோற்றவர்
தன்
தன்னுடன் இணைத்தே
வெற்றியை தந்தவன்

கலைதவம் செய்தான்
தன்னுழைபை விதைத்தான்
உள்ளத்தால் சிரித்தான்
எண்ணத்தால் உயர்ந்தான்

விஜய் சேதுபதி எனும்
மனிதா
விஜய் சேதுபதியே
மாமனிதா

சீனு ராமசாமி

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com