Dagalty Movie Gallery & Preview

619

Dagalty Movie Gallery

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

யார் பெரிய டகால்டி
சந்தானமா? யோகி பாபுவா ?
” டகால்டி “
இம்மாதம் 31 ரிலீஸ்

18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள ” டகால்டி ”
தணிக்கையானது. இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.

சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி.

கார்கி பாடல்களையும், விஜயநாராயணன் இசையையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஜாக்கி கலையையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத்தயாரிப்பையும், கவனித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் விஜய் ஆனந்த்.

சந்தானத்துடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் முதல் படம்.

ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கும் முதல் படம்.

பாடகர் விஜயநாராயணன் இசைமைக்கும் முதல் படம்.

எஸ்.பி.செளத்ரி தயாரிக்கும் முதல் படம் என பல முதல்களுடன் ” டகால்டி ” வருகிறது

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com