Actress Ritika Singh on Oh My Kadavule

729

Actress Ritika Singh on Oh My Kadavule

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

 Actress Ritika Singh on Oh My Kadavule 

The National award winning actress Ritika Singh is soaked in emotional glee for having a beautiful experience working in ‘Oh My Kadavule’. The actress feels very invigorated and high-spirited to the wonderful response for the film’s trailer. With the film hitting screens on February 14, she looks sure-footedly confident that OMK is going to be a Valentine Delight for all.

Actress Ritika Singh says, “Oh My Kadavule is a special film to me as I make my comeback in Tamil film industry nearly after 3 years. I was earnestly looking out for something unique and this one appealed to me like a golden ticket.  When director Ashwath narrated me the script, the first thing that instantly kicked up my excitements was playing a Christian bride. It was more like a dream come true for me and eventually, the script was tremendous. I can assure that you can see the smiling faces. Ashok Selvan is such a talented actor and after this film’s release, his kitty will be filled with more offers. Vani Bhojan is an actress with exceptional caliber. Apart from being a wonderful performer, her positive and good hearted nature kept imparting lots of good vibes on the sets. She is more like a sister to me now. OMK isn’t just about romance, but has lots of emotional values emphasized on friendship and other relationships as well. Each and every character you see in the trailer will have a vital prominence.”

Oh My Kadavule is produced by G. Dilli Babu for Axess Film Factory in association with Abhinaya Selvam for Happy High Pictures. The film is directed by debutant Ashwath Marimuthu with Leon James composing music. Vidhu Ayyanna is handling cinematography and Boopathy Selvaraj is taking care of editing.

 
“ஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு – ரித்திகா சிங் ! 

முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையானவர் ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில்,  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த  வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது…

“ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கவாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது. படம் முழுக்க நீங்கள்  புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள். அசோக் செல்வன் மிகத்திறமை வாய்ந்த நடிகர் இப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும். வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரை சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகை தவழும்.  நேர்மறை தன்மை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார். “ஓ மை கடவுளே” வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம்  நீங்காது நிற்கும் என்றார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து “ஓ மை கடவுளே” படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

அசோக்செல்வன் நாயகனாக நடிக்க ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ளார்.
வாணி போஜன், M S பாஸ்கர், சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு  – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com