“மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது”.. K.பாக்கியராஜ் பேச்சு.

492

PARAMAPATHAM VILAIYATTU Trailer Launch Event stills

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

“மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது..”

K.பாக்கியராஜ் பேச்சு.

வருகிற 28-ம் தேதி வெளியாகும் #பரமபதம்விளையாட்டு படத்தின் புரமோஷனுக்கு அப்பட நாயகி திரிஷா ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால்.. அவர் வாங்கியிருக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பி கொடுக்க வேண்டி வரும்.. #Tசிவா பேச்சு. @TSivaAmma

24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா சத்தியம் தியேட்டரில் நடந்தது. அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:-பாடலாசிரியர் தரண் பேசியதாவது,

இப்படத்தில் ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. ஆனால், ஜாலியான பாடல். முதன்முறையாக அம்ரீஷ்-க்கு எழுதுகிறேன். வித்தியாசமாக எழுத வேண்டும் என்று அப்பாடலைப் பற்றி விளக்கம் கேட்டேன். ‘ஓ கலா’ என்று தொடங்கும்படி பாடலை இயற்றினேன். ஆனால், இப்பாடல் பதிவு முடிந்து கேட்டபோது, தரம்குறைந்த பாடல் என்ற பெயர் பெற்றுவிடும் என்று அதிர்ச்சியடைந்தேன். இயக்குநரிடமும், இசையமைப்பாளரிடமும் தெரிவித்தபோது, அவர்களும் அதைப்புரிந்து கொண்டு மறுமுறை படப்பிடிப்பு செய்தார்கள் என்றார்.

நடிகை சங்கீதா பேசும்போது,

இப்படத்தில் திரிஷாவின் தோழியாக நடித்திருக்கிறேன். இப்படம் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகிறேன். சில காட்சிகளே வந்தாலும் என்னுடை கதாபாத்திரம் பிடித்ததால் நடித்திருக்கிறேன் என்றார்.

ஒளிப்பதிவாளர் ஜேடி பேசும்போது,

இப்படத்திற்காக வாய்ப்பு கொடுத்த இயக்குநர் திருஞானத்திற்கு நன்றி என்றார்.

சிறுமி மானஸ்வி பேசும்போது,

இப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருக்கிறேன். காது கேட்காத வாய் பேசமுடியாத குழந்தையாக நடித்திருக்கிறேன். திரிஷா எனக்கு பல உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார். ஒருமுறை எனக்கு குளிரெடுத்தது. அப்போது திரிஷா தனது போர்வைக் கொடுத்தார் என்றார்.

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும்போது,

என்னுடைய 8-வது படம் திரிஷாவின் 60-வது படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. திருஞானம் என்னிடம் பேசும்போது, இப்படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இருக்கிறது. ‘மொட்ட ஷிவா கெட்ட ஷிவா’ படத்தில் வந்த ‘ஹர ஹர மஹாதேவ’ பாடல் போல வர வேண்டும் என்று கேட்டார். அதுபோல இதில் ஒரு பாடல் ஹிட் அடித்திருக்கிறது.

நடிகர் விஜய் வர்மா பேசும்போது,

இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. இப்படத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

இயக்குநர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

15 நாட்களுக்கு முன்பு இப்படத்தை பார்க்கும்படி என்னை இயக்குநர் திருஞானம் அழைத்திருந்தார். படம் பார்க்கும் போது 20 படங்கள் இயக்கிய அனுபவம் தெரிந்தது. அவரிடம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. புது முகம் விஜய்வர்மாவிற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. சிறுமி மானஸ்வி நன்றாக நடித்திருக்கிறார். அவர் நகைச்சுவை நடிகர் கொட்டச்சியின் மகள் என்று பிறகுதான் தெரிந்தது. அம்ரீஷின் இசை சிறப்பாக இருக்கிறது.

தான் நடிக்கும் படத்தின் விளம்பரத்திற்கு ஏன் நடிகர், நடிகைகள் வரமால் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பெரிய நாயகர்கள் ரஜினிகாந்த், விஜய், கமலஹாசன் போன்றோர்களே தாங்கள் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு வரும்போது இவர்கள் ஏன் வராமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், உங்களைப் போன்றோர்களை வைத்து படம் எடுத்தால் தான் விளம்பரமாகும் என்று எடுக்கிறோம். இல்லையென்றால், புதுமுகங்களை வைத்தே எடுத்து
விடுவோமே என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

படம் பார்த்தேன். ஆச்சிரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் திருஞானம். திரிஷாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. முக்கியமாக கூறவேண்டுமானால் இசையை கூறலாம். அம்ரீஷின் இசை அற்புதமாக இருக்கிறது. புதுமுகம் விஜய் வர்மாவின் நடிப்பு முதல் படம் போல தெரியவில்லை. இயக்குநர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். எதிர்காலத்தில் மிகப் பெரிய நடிகராக வருவார் விஜய் வர்மா. இயக்குநருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

சிறுமி மானஸ்வி பேசமுடியாமல் நடித்து அனைவரும் அவரைப் பற்றி பேசும்படி வைத்துவிட்டார். தமிழ் பண்பாட்டை குலைக்கும் வகையில் பாடல் இயற்றக் கூடாது என்றார்.

இப்படம் பார்த்ததும் சென்னை ஏரியாவை அபிராமி ராமனாதனும், NSC ஏரியாவை டிரைடண்ட் ரவியும், ஒரு ஏரியாவை நானும் வாங்கிக்கொண்டோம். மதுரை மற்றும் கோயம்புத்தூர் விநியோக உரிமை மட்டும் தான் இன்னும் யாரும் இருக்கு. அந்த குறையை சுரேஷ் காமாட்சியும், டி.சிவாவும் தீர்த்து விடுவார்கள் என்றார்.

கவிஞர் சொற்கோ பேசும்போது,

10 நிமிடங்களில் 40 ஆயிரம் பேர் ரசிக்கக் கூடிய பாடலை எழுத வைத்தவர் இசையமைப்பாளர் அம்ரீஷ். ‘ஹர ஹர மஹாதேவகி’ பாடலை 10 நிமிடங்களில் எழுதினேன். கவிஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் இருக்கும் திறமையை குறைந்த நேரத்தில் வெளிவாங்கி விடுவார் இசையமைப்பாளர் அம்ரீஷ் என்றார்.

ஹெச்.முரளி பேசும்போது,

பொதுவாக நான் இரவு காட்சிகள் பார்க்க விரும்ப மாட்டேன். திருஞானம் கட்டாயப்படுத்தி அழைத்ததால் சென்றேன். திருஞானத்தை தயாரிப்பாளராகத்தான் தெரியும். ஆனால், இந்தளவு சிறந்த படமாக இயக்கியிருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படத்தின் கதாநாயகன் அம்ரீஷ் தான். இவரின் இசை படத்திற்கு நாயகன் போல இருக்கிறது.

இப்படம் தயாரிப்பாளருக்கும், விநியோகதஸ்தர்களுக்கும் பெரிய லாபத்தை ஈட்டி தரும் என்றார்.

டி.ஷிவா பேசும்போது,

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.

இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு  கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார்.

இயக்குநர் திருஞானம் பேசும்போது,

திரிஷாவின் 60-வது திரைப்படம். அதை நான் இயக்குவதற்கு வாய்ப்புக் கொடுத்த திரிஷாவிற்கு நன்றி. கடின உழைப்பு கொடுத்து இப்படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு அனைவரின் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றேன்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

இப்படத்தின் தலைப்பு ‘பரமபதம் விளையாட்டு’ அருமையான தலைப்பு. இத்தனை காலம் அதை மற்றவர்கள் உபயோகப்படுத்தாமல் தவறவிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால், பரமபதம் என்ற வார்த்தை வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. அந்த தலைப்பை வைத்த இயக்குநர் திருஞானத்திற்கு பாராட்டுக்கள். டிரெய்லரைப் பார்க்கும்போது படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்திற்கு எதற்காக யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை.

சிறுமி மானஸ்வி நன்றாக நடித்திருக்கிறார்.

நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை. நேற்றுதான் என்னை அழைத்தார்கள். நடிகை ஜெயசித்ராவிற்காகத்தான் வந்தேன். ஏனென்றால், ஒரு விழாவிற்கு அழைத்தால், அப்படத்தைப் பார்த்தால் தான் அப்படத்தைப் பற்றி நல்ல விஷயங்களைக் கூறி வியாபாரத்திற்கு நன்மை செய்ய முடியும்.

தயாரிப்பாளர் கே.ராஜன் எப்போதும் மற்றவர்கள் பிரச்னைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பவர். அதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் செய்த நற்செயல்களுக்கும் முதல் ஆளாகப் பாராட்டக்கூடியவரும் அவர்தான் என்றார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com