*ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி*Hi guy

498

 

இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது ‘டிஜி பிலிம் கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.

ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன், திரில்லர் கலந்து திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

விரைவில் இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com