Cinematographer-Producer Aravinnd Singh says, “The film is loosely based on real-life incidents and is set against the college backdrops. In the initial phase, when Vijay narrated me the script, I found it more exciting for the gripping moments. Soon after locking the final draft, our priority was to knock the doors of Arulnithi, who always welcomes unique scripts. Having handled cinematography for his five films – Aarathu Sinam, Demonte Colony, Iravukku Aayiram Kangal K 13 and the forth coming untitled film produced by Five star Kathiresan and directed by debutant director Innasi. .My beliefs got firmer that he owns sheer excellence in choosing newfangled projects. He was pretty much happy and excited when Vijay narrated him the script and immediately gave a nod. Ennobled as a YouTube sensation through his fabulous spell in ‘Eruma Saani’, Vijay has become a mandatory choice of many filmmakers and actors for boosting the hilarious quotients in movies. I am happy that he is embarking on his new journey as a filmmaker through my production.”
Talks are going on with leading actors and technicians to be a part of this film and the official announcements on the same will be made shortly.
On his part, Arulnithi is now awaiting the release of ‘Kalathil Sandhipoam’ produced by Super Good Films RB Choudary, which features him alongside Jiiva. Apart from this film, the shooting of his other untitled film produced by 5 Star Kathiresan and directed by debutant Innasi has been wrapped up with post-production work on full swing.
“எரும சாணி” புகழ் விஜய்யுடன் இணைந்த நடிகர் அருள்நிதி !
வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன்மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் மீட்சியாக இணைய உலகில் “எரும சாணி” மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் MNM Films சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது….
இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக்கதையை கூறியபோதே அதில் பல உற்சாகமிகு தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது. இந்தப்படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள் முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான பரிட்சார்த்த முயற்சிகளுக்கு செவி சாய்ப்பவர் அவர். “ஆறாது சினம், டிமாண்டி காலனி,இரவுக்கு ஆயிரம் கண்கள், K13” , தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் உருவாகி வெளிவர உள்ள பெயரிடப்படாத புதிய படம் என ஐந்து படங்கள் அவருடன் ஒளிப்பதிவாளராகபணிபுரிந்ததில் அவரது கதைத்தேர்வு, திரைத்துறையில் தெளிந்த பார்வை மீது பெரும் மரியாதை உண்டானது. எனவே அவர் தான் இப்படத்திற்கு சரியானவர் என அவரை அணுகினோம். அவரும் விஜய் கூறிய திரைக்கதையில் உற்சாகமாகி உடனடியாக ஒப்புக்கொண்டார். இணைய உலகில் “எரும சாணி” மூலம் புகழ் பெற்ற விஜய் ராஜேந்திரன் சினிமாவில் அறிமுகமாகி நடிகர்கள் இயக்குநர்களின் முதல்தர தேர்வாக, காமிக்கல் காமெடி செல்லமாக மாறியிருக்கிறார். அவர் பெரிய திரையில் இயக்குநராக தனது பயணத்தை எனது தயாரிப்பில் தொடங்குவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.
விஜய் குமார் ராஜேந்திரன் பெரிய திரையில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் வெற்றி பெற்ற “நட்பே துணை” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
நடிகர் அருள்நிதி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் R B சௌத்திரி தயாரிப்பில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களின் 5ஸ்டார் நிறுவனத்தில் புதுமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் நடித்துள்ள பெயரிடப்படாத புதிய படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது அருள்நிதி, விஜய் குமார் ராஜேந்திரன் இணையும் இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.