வேலம்மாள் நெக்சஸ் வலையொளியில் ‘ஆங்கிலத்தில் பேசுவோம்’ பயிற்சி வகுப்புகள் நேரலை அமர்வு.

88
Header Aside Logo

2020 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி வேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் சேனலில் ஆங்கில மொழிப் பயிற்சியாளரான திருமதி அமிர்தா ஷரோன் அவர்கள் பங்கேற்று நடத்திய ‘ஆங்கிலப் பேச்சு மற்றும் உச்சரிப்புக்கலைத் திறன்கள் ஓர் அறிமுகம்’ என்ற அமர்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

தகவல்தொடர்புக்கான முதன்மை ஆதாரமாக ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுவதாக இந்த அமர்வு அமைந்தது. ஒருவர் ஏன் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்களின் மீதும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த அமர்வின் பயணங்களில் ஒரு பகுதியாக மொழியில் எழுத்துக்களுக்கும் ஒலிகளுக்கும் இடையிலான உறவு, ஒலிகளை எவ்வாறு உச்சரிப்பது மற்றும் சொற்களை எவ்வாறு இணைப்பது போன்றவற்றிற்கான உச்சரிப்பு விதிமுறைகள் அடங்கியிருந்தன. மொழித் திறனை உயர்த்துவதற்கு வழிவகுத்த இந்த அமர்வினை பல ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு களித்தனர் .

பார்வையாளர்களின் பங்களிப்பு இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஓர் சாட்சியாகவும் அமைந்தது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com