SS Rajamouli Revealed about Adhira Movie Hero Kalyan Dasari | DVV Danayya | RRR Movie | FC

270

பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி இணையும் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின்  “அதிரா” படத்தின் முதல் காட்டுத்துணுக்கை,    ராஜமௌலி, என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

கிரியேட்டிவ்  மேதையாக வலம் வரும் படைப்பாளி பிரசாந்த் வர்மா நட்சத்திர நடிகர்களை  வைத்து படம் எடுக்காமல்,  சூப்பர் கதாநாயகர்களைத் தானே உருவாக்கி வருகிறார். ஜாம்பி கான்செப்ட்டை முதல் முறையாக டோலிவுட்டில் அறிமுகப்படுத்திய பிறகு, பிரசாந்த் வர்மா இந்தியாவின்  முதல் அசல் சூப்பர் ஹீரோ படமான ஹனு-மேன் படத்தை , நடிகர் தேசா சர்ஜா  நடிப்பில் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் மற்றொரு நாயகனை வைத்து இன்னொரு சூப்பர் ஹீரோ படத்தினையும் உருவாக்கவுள்ளார். பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் அதிரா என்ற படத்தின் மூலம் சூப்பர் ஹீரோவாக நாயகன் கல்யாண் தாசரி அறிமுகமாகிறார்.

இந்தியப் புராணக் கதாபாத்திரங்களின் ஈர்ர்பில், பிரசாந்த் வர்மா மார்வெல் மற்றும் டிசி போன்ற சூப்பர் கதாநாயகர்களைப் போன்ற  பிரபஞ்சத்தை, இங்கு இந்தியாவில் உருவாக்குகிறார். பிரசாந்த் வர்மாவுடைய சினிமாடிக் யுனிவர்ஸின் இந்தப் படம் வசனம் மற்றும் கதை சொல்லும் வகையில் தனித்துவமாக இருக்கும். அதிரா பிரசாந்த் வர்மாவின்  மற்றுமொரு  சூப்பர் ஹீரோ படம், இதில் கல்யாண் தலைப்பு பாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இளம் புலி என்டிஆர் மற்றும் மாபெரும் பவர் ஸ்டார் ராம் சரண் ஆகியோர் “அதிரா”  படத்தின் காட்டுத்துணுக்கை வெளியிட்டனர். முதற்கட்ட விளம்பரங்களில் பங்கேற்கும் இந்த மூன்று பிரபல முகங்களின் வாயிலாக அதிரா உடைய காட்சித்திணுக்கு  பெரிய அளவில், அனைவரையும் சென்றடையும்.

நமது  சூப்பர் ஹீரோவின் வலிமையை  வெளிப்படுத்தும் விதமாக காணொளியில் தொடர் வரிசைகளாகப் பல காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. சிறுவயதிலிருந்தே மின்சார ஆற்றலை உருவாக்கும் இந்த சிறப்புத் திறனை இந்த சூப்பர்ஹீரோ  பெற்றுள்ளார், மேலும் அவர் வளரும்போது இன்னும்  வலிமையாகவும் வீரமாகவும் மாறுகிறார்.

மற்ற எல்லா சூப்பர் ஹீரோவைப் போலவே, தீமைகளை அழிக்கவும் அப்பாவிகளைப் பாதுகாக்கவும் செய்கிறார். இப்படத்தின் காட்சி துணுக்குகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உள்ளன, மேலும் இறுதி காட்சியில் ஆந்திராவான கல்யாண்  பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுதத்தின் மூலம், மின் ஆற்றலை உருவாக்கும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அவர் ஏந்தியிருக்கும் ஆயுதம் முதுகெலும்பு வடிவத்தில் உள்ளது மற்றும் அது இந்திரனின் சக்தி வாய்ந்த ஆயுதமான வஜ்ராயுதம் போல் தெரிகிறது.

“அதிரா’  படத்தின் காட்சி துணுக்கு அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்துள்ளது, மேலும் இதுவரை திரையில் கண்டிராத  அதிரடி பிரமாண்டத்தை இத்திரைப்படத்தில் எதிர்பார்க்கலாம். இப்படத்தின் முதல் காட்டுத்துணுக்கே  பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவும் செய்துள்ளது.

கல்யாண் தாசரியின் முகம் ஓரளவு மட்டும்  வெளிப்பட்டு, நல்ல கட்டுமஸ்தான உடல், அழகான தோற்றம் மற்றும் உயரத்துடன் இப்பாத்திரத்தில் வெகு பொருத்தமாகத் தெரிகிறார். இளைஞர்களுக்கு இந்த அறிமுகம் ஒரு கனவாக இருக்கும்.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கீழ் அதிக நிதிநிலையில் K நிரஞ்சன ரெட்டி இப்படத்தைத் தயாரிக்கிறார், திருமதி தன்யா வழங்குகிறார். படத்தின் திரைக்கதையை  ஸ்கிரிப்ட்ஸ்வில்லே செய்துள்ளனர்.

இப்படத்திற்கு கௌரி ஹரி இசையமைக்க, தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களின் அருமையான உழைப்பில் காட்சியமைப்பும் பின்னணி இசையும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.

பிரசாந்த் வர்மா ஹனு-மேன்  படம் தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்த பிறகு அதிரா படத்தினை  தொடங்குவார்.

நடிகர்கள்: கல்யாண் தாசரி

தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: பிரசாந்த் வர்மா
தயாரிப்பாளர்: K நிரஞ்சன ரெட்டி
பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் வழங்குபவர்கள்: திருமதி தன்யா திரைக்கதை: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே
ஒளிப்பதிவு : தாசரதி சிவேந்திரா
இசை: கௌரி ஹரி
நிர்வாக தயாரிப்பாளர்: அஸ்ரின் ரெட்டி
லைன் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி இணை தயாரிப்பாளர்: குஷால் ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா
PRO: சதீஷ் (AIM) தமிழ், வம்சி-சேகர் – தெலுங்கு
ஆடை வடிவமைப்பாளர்: லங்கா சந்தோஷி

80%
Awesome
  • Design

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com