
அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
வழக்கமாக ஜனவரி பொங்கல் திருநாளில் நடைபெரும் சென்னை புத்தக காட்சி 2021 இந்த ஆண்டு பெருந்தொற்றுகாரணமாக பொங்கல் விடுமுறை காலங்களில் நடத்த இயலவில்லை ஆனால் 44
வது சென்னைப் புத்தகக் காட்சியை வருகின்ற பிப்ரவரி /மார்ச் காலங்களுக்குள் நடத்துவதற்காக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க ப்பட்டுள்ளது அந்த விண்ணப்பம் பேரிடர் மேலாண்மை துறையில் அனுமதிக்காக காத்திருக்கிறது. அரசு அனுமதி கிடைத்தவுடன் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் 44ஆவது சென்னை புத்தகக் காட்சி 2021 நடைபெறும் வாசகர்கள் இதுகுறித்து விசாரிப்பதால் இந்த தகவலை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் அதற்கிடையே கடந்த 8 மாதகாலமாக புத்தக விற்பனை இல்லாத சூழலில் இந்த பொங்கல் விடுமுறை காலங்களில் வாசகர்களின் புத்தக ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சில பதிப்பாளர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் அவர்கள் சக்திக்கு ஏற்றபடி சிறு சிறு புத்தக காட்சிகளை சென்னையை சுற்றி நடத்தி வருகிறார்கள் இது வாசகர்களின் அறிவு தாகத்திற்கு சிறு வடிகாலாக அமையுமென்று நம்புகிறோம் மேலும் பபாசி நடத்தும் பிரம்மாண்டமான 44 ஆவது சென்னை புத்தகக் காட்சி அரசு அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அதனுடைய சிறப்பு தன்மைகளோடு பல்வேறு புதிய அம்சங்களுடன் சிறந்த பண்பாட்டு நிகழ்வாக நடைபெறும் என்பதையும் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்
ஆர்.எஸ்.சண்முகம்
தலைவர் பப்பாசி