“மக்களின் பேராதரவோடு வெள்ளித்திரையில் அசத்தும் அல்டி”

70
Header Aside Logo

 

தமிழ் சினிமாவின் இணையற்ற நகைச்சுவை நடிகர்களில் மயில் சாமி அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் அவருடைய மகன் அன்பு மயில்சாமி கடந்த நவம்பர் 27ம் தேதி திரைக்கு வந்த ‘அல்டி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்துள்ளார். ‘அல்டி’ என்ற இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஜெ.உசேன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 27ம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வாரம் வெளியான படங்களில் ‘அல்டி’ மிகவும் பேசப்படுகின்ற படமாக வெற்றிநடை போட்டு வருகின்றது.

முதல் திரைப்படம் என்ற பிம்பத்தில் இருந்து மாறுபட்டு இயக்குநர் எம்.ஜெ.உசேன் இந்த படத்தை திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக அளித்துள்ளார். மக்களுக்கு தேவையான கருத்துக்களுடன் ஜனரஞ்சகமான ஒரு படமாக ‘அல்டி’ கலக்கி வருகின்றது.

அறிமுக படம் என்றபோது, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்துள்ளார் அன்பு மயில்சாமி. நடன இயக்குநர் ராபர்ட் தான் நடித்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்றால் அது மிகையல்ல. மொத்தத்தில் மக்கள் ரசிக்கும் அசத்தல் திரைப்படமாக அல்டி அசத்தி வருகின்றது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com