Kavalthurai Ungal Nanban Audio Launch Event Stills & News

547

Kavalthurai Ungal Nanban Audio Launch Event stills & News

Flickr Album Gallery Pro Powered By: wpfrank
The audio launch of Kavalthurai Ungal Nanban was held this afternoon at Prasad Lab in Chennai. The occasion was graced over by the cast and crew members of this film with Amma Creations T. Siva releasing the audio.


Speaking on the occasion, producer T. Siva said, “These days, the film industry has started getting pressures and barricades from all sides. Following many excruciating elements imposed on movie tickets, the Central Government is now imposing 8% TDS as well. We are now heading to Delhi to request the Government to exempt them as only 10% of movies across the year make such big business. I thank Dhananjayan sir for taking efforts to acquire this film, market and release it. Such examples are inspiring for other producers as well to come up and encourage new ideas and young talents.”

Actor Mime Gopi said, “It’s been a real good experience working in this film. Director RDM has conceptualized a story that is so much hard-hitting and I owe him a lot for giving me a substantial role to perform. Suresh Ravi has worked a lot on his part and you can notice it through his transformation from being handsome chap to rugged and insomniac person by second hour in accordance to the script. Raveena has done a decent job and her performance will be lauded in this movie. Action choreography is going to be an additional attraction and the climax portions will leave a deep impact on the audiences.”

Actor Suresh Ravi, who has played the lead role says, “Myself and director RDM met 8 years ago and we wanted to make a film together. We are now happy that it has finally come true. I thank producer Dhananjayan sir for coming forward and releasing our film. His Golden touch has found good market for many movies with groovy opening and we are confident that Kavalthurai Ungal Nanban will have the same impact. We have showcased the other side of policemen as many movie have portrayed them in good lights. Of course, there are good and bad in any profession and we wanted to focus upon the latter one.”

Actress Raveena said, “I am so much happy that RDM chose me to be a part of this film and giving me a substantial role. I am sure everyone will love this film and am looking forward to a positive response from the audiences.”

Producer Bhaskar, BR Talkies said, “When RDM narrated me the script, I was completely shocked in many places and it was a surprise indeed. As an audience, I could feel that the movie will have a good impact, especially during the climax portions.”

Actor RJ Munna said , “Apart from the intriguing story, what’s more impressive about the film is each and every character crafted with so much importance. The climax portion will be more emotional and audiences will feel the impact even after the show is over.”

Actor Ramadoss said, “Director RDM is a low budget version of Mani Ratnam, where he is very keen on clarity and getting it materialized without any compromises. I am so happy to be a part of this film.”

Action choreographer Om Prakash said, “There are many portions, where the actors had to gear up for risky stunts and they managed to pull it off excellently. If not for their earnest dedication, this would have not been possible.”

Music director Aditya said, “The journey with Kavalthurai Ungal Nanban has been long and yet very elating. All the actors and technicians involved in the film have given their best into it and I am keeping the fingers crossed expecting a good response from the audiences, press and media.”

Actor Dhananjayan played the perfect host for the event and he said, “We had arranged for a special screening for few filmmakers in the industry. Soon after watching the movie, they developed an unconditional bonding towards the film and voluntarily assured that they will promote this movie.”

 

“காவல்துறை உங்கள் நண்பன்” இசை வெளியீட்டு விழா ! 

தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்” நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார். இப்படத்தின் இசை விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடந்தேறியது.

இந்நிகழ்வில்  தயாரிப்பாளர் T. சிவா பேசியது …

தற்போது திரையுலகம் பலமுனைகளிலும் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது. நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை  முறையிட டெல்லி செல்லவுள்ளோம். 10 சதவீத படங்களில்  மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. இன்று இங்கே தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஒரு நல்ல முயற்சியை கண்டுகொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப்பெரிய அளவில் எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்.

நடிகர் மைம் கோபி பேசியது….

உண்மையில் இப்படம் ஒரு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது . இயக்குநர் RDM மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாக திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி. சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் முரட்டு தனமாக அவர் மாறுவதை கண்டு நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பை தந்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். இப்படத்தின் ஆக்‌ஷன் பெரிய அளவில் பேசப்படும். படத்தின் க்ளைமாக்ஸ் பலரையும் அதிரவைத்து,  மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

நாயகன் சுரேஷ் ரவி பேசியது…

நானும் இயக்குநர் RDM இருவரும் 8 வருடங்களாக இணைந்து படம் செய்ய வேண்டும் என பேசிக்கொண்டிருந்தோம். இப்போது எங்கள் கனவு உண்மையாகியுள்ளது. எங்கள் படத்தை முன்வந்து வாங்கியதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. அவர் வெளியிட்ட பல படங்கள் தரமான கதையுடன், நல்ல பெயர் பெற்று வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் “காவல்துறை உங்கள் நண்பன்” படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது. காவல்துறை பற்றிய நல்லவற்றை பல படங்கள் சொல்லிய நிலையில் இப்படம் அதன் வேறொரு முகத்தை காட்டும். எல்லாத்துறையிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும் இதில் நாங்கள் காவல்துறையின் காட்டப்படாத பக்கத்தை காட்டியுள்ளோம்.

நாயகி ரவீனா பேசியது…

என்னை இப்படத்திற்காக தேர்ந்தெடுத்து, மிகசிறந்ததொரு கதாப்பாத்திரம் தந்ததற்கு  இயக்குநர் RDM அவர்களுக்கு நன்றி. திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பாரட்டை பெறுவதற்கு ஆவலுடன்  காத்திருக்கிறேன்.

BR Talkies சார்பில் தயாரிப்பாளர் B. பாஸ்கரன் பேசியது…

முதன் முதலாக இயக்குநர் RDM என்னிடம் கதை கூறியபோது எனக்கு பல இடங்களில் அதிர்ச்சியாக இருந்தது. சில ஆச்சர்யங்களும் இருந்தது. இந்தப்படம், பார்ப்பவர்களை பெரிய அள்வில் பாதிக்கும் குறிப்பாக இறுதிக்காட்சி பெரும் அதிர்வை தரும்.

நடிகர் RJ முன்னா பேசியது…

இப்படத்தில் அழுத்தமான கதை இருக்கிறது அதைவிட முக்கியம் என்னவெனில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக படைக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் மிகவும் உணர்வுபூர்வமானதாக இருக்கும். படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் அதன் பாதிப்பில் இருந்து மீளமாட்டார்கள்.

நடிகர் ராம்தாஸ் பேசியது….

இயக்குநர் RDM  ஒரு மினி மணிரத்னம் எனலாம். மிகவும் தெளிவான சிந்தனையுடன், குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியாக, எந்தவித சமரசமுமின்றி படம் எடுக்க கூடியவர். இப்படத்தில் பங்கு கொண்டது மிகவும் மகிழ்ச்சி.

சண்டைப்பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் பேசியது…

படத்தில் நிறைய இடங்களில் மிக கடினமான சண்டைக்காட்சிகள் இருந்தது. நடிகர்கள் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் ஒத்துழைத்துராவிட்டால் அதனை படமாக்கியிருக்கவே முடியாது. படக்குழுவின் அயராத உழைப்பில் படம் அற்புதமாக வந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஆதித்யா பேசியது…

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தில் எனது பயணம் மிக நீண்டதொரு அழகான பயணம். இப்படத்தில் பங்கு கொண்ட நடிகர்கள்,  தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள். படத்தை ரசிகர்கள், விமர்சகர்கள்  எவ்வாறு வரவேற்பார்கள் என்பதை
பார்க்க வெகு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் மொத்த நிகழ்வையும் அழகாக தொகுத்து வழங்கி பேசியது…

இப்படத்தை தமிழின் மிக முக்கிய இயக்குநர்களுக்கு திரையிட்டு காட்டினோம். அனைவரும் படத்தை வெகுவாக ரசித்ததோடு இப்படத்தை தங்கள் படம் போல் கருதி விளம்பரம்படுத்த போவதாக கூறினார்கள். இப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்.

சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, RJ முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள்.
ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார். வசனத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல்.

B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com