Filmmaker Sudha Kongara releases Colourful Indie song ‘THIMIRUKAARIYE’ Ft. Famous YouTuber Trending Theeviravadhi Goutham & Brigida Saga !!
Indie songs have become the most fascinating things in Tamil music industry, and this year has witnessed a slew of promising numbers, which have clasped a prominent stature in the charts of music lovers. Joining now in the league is a colourful romantic song titled ‘Thimirukaariye’, set against the backdrops of a Temple Festival. The renowned filmmaker Sudha Kongara launched the song during a college event that was held recently in Chennai.
The song is composed by A.K. Sasidaran, crooned by Anthony Dasan & is directed by Rudhra jith featuring the famous YouTuber Trending Theeviravadhi Goutham & Brigida Saga. Since the announcement and release of the song teaser, anticipation has surged for its captivating visuals and infectious tune. Significantly, with the captivating vocal of Anthony Dasan, and an appreciable musical score by A.K.Sasidaran, the song exceeded everyone’s expectations. The song is elevated to new heights by the captivating chemistry of Trending Theeviravadhi Goutham and Brigida Saga. The enthralling dance moves by Sridhar Master are the perfect finishing touch, adding an extra layer of excitement and energy.
The song has received an overwhelming number of views and streams on YouTube and all music platforms, and has been warmly received by all.
Mallika Arjun is the cinematographer and Aadit Maran is the editor for this song, produced by Trending Theerviravadhi Goutham Productions & co-produced by Senthilkumar Saritha (SS & Co)
சுதா கொங்கரா வெளியிட்ட ‘திமிருக்காரியே’ இன்டீ வீடியோ!!
தமிழ் இசைத் துறையில் சமீப காலங்களில் இன்டீ பாடல்கள் என்ற புதுவகை ஆல்பங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. சொல்லப் போனால், இன்டீ பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றும் கூறலாம். இந்தப் பட்டியலில் புதுவரவு இன்டீ பாடலாக இணைந்துள்ளது தான், ‘திமிருக்காரியே.’ கோவில் திருவிழா பின்னணியில் இந்தப் பாடல் உருவாகி இருக்கிறது.
முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் பாடலை சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டார். ஏ.கே. சசிதரன் இசமையமைத்துள்ள இந்தப் பாடலை அந்தோனி தாசன் பாடியுள்ளார். பிரபல யூடியூபர்களான டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் மற்றும் பிரிகிடா சாகா இணைந்துள்ள இந்தப் பாடலை ருத்ரா ஜித் இயக்கியுள்ளார்.
ஏற்கனவே இந்தப் பாடலின் அறிவிப்பு மற்றும் டீசர், இதற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இதோடு அந்தோனி தாசனின் குரல் மற்றும் ஏ.கே. சசிதரனின் இசை இந்தப் பாடல் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. ஸ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில் டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் மற்றும் பிரிகிடா சாகாவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வேலை செய்துள்ளது.
இதுதவிர ஸ்ரீதர் மாஸ்டரின் அசத்தல் நடன அசைவுகள் பாடலுக்கு கூடுதல் உற்சாகம் மற்றும் எனர்ஜியை சேர்த்துள்ளது. இந்தப் பாடல் யூடியூப் மற்றும் முன்னணி இசை தளங்களில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடல் வீடியோவுக்கு மல்லிகா அர்ஜூன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஆதித் மாறன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்தப் பாடலை டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் புரொடெக்ஷன்ஸ் தயாரிக்க செந்தில்குமார் சரிதா சார்பில் எஸ்.எஸ். அன்ட் கோ இணைந்து தயாரித்துள்ளது.