‘Chitrai Thirunal’ special programs – Kalaignar TV..!

கலைஞர் தொலைக்காட்சியின் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்..!

கலைஞர் தொலைக்காட்சியில் சித்திரை திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதன்படி வருகிற ஏப்ரல் 14 காலை 9:00 மணிக்கு 90-களில் தமிழ் சினிமாவில் நாயகியாக கொடிகட்டி பறந்த நடிகை தேவயாணி பங்கேற்கும் “நம்ம வீட்டு நட்சத்திரம்” சிறப்பு நிகழ்ச்சியும், காலை 10:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை “சிறப்பு பட்டிமன்றமும்” ஒளிபரப்பாக இருக்கிறது.

பிற்பகல் 1.30 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடித்து பாராட்டுகளை குவித்த “மாமன்னன்” சிறப்புத் திரைப்படமும், மாலை 6 மணிக்கு ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் “தமிழோடு விளையாடு” சிறப்பு நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் – இவானா நடிப்பில் “லவ் டுடே” சிறப்புத் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Chitrai ThirunalKalaignar TVspecial programs
Comments (0)
Add Comment