“Achcham Enbathu Illayea – MISSION CHAPTER 1”

“Achcham Enbathu Illayea – MISSION CHAPTER 1

 
லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். வெளியான 24 மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட மில்லியன் பார்வைகளை நெருங்கி யூடியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லயே’ பட டீசர். படத்தின் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி தயாரித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர்கள்:

அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

இயக்கம்: விஜய்,
லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ் குமரன்,
தயாரிப்பு: சுபாஸ்கரன், எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி,
இணைத்தயாரிப்பு: சூர்யா வம்சி பிரசாத் கோதா- ஜீவன் கோத்தா,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
கதை & திரைக்கதை: ஏ.மகாதேவ்,
வசனம்: விஜய்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
எடிட்டிங்:  அந்தோணி,
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
கலை இயக்குநர்: சரவணன் வசந்த்,
ஆடை வடிவமைப்பாளர்: ருச்சி முனோத்,
ஒப்பனை: பட்டணம் ரஷீத்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: வி கணேஷ்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: கே மணி வர்மா,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள் (யுகே): சிவகுமார், சிவ சரவணன்,
தயாரிப்பு நிர்வாகி – மனோஜ் குமார் கே,
ஆடை வடிவமைப்பாளர்:  மொடப்பள்ளி ரமணா,
ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
VFX – D நோட்,
ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா,
Promotion & Strategies: ஷியாம் ஜாக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பாளர் – பிரதூல் என்.டி


 
"Achcham Enbathu Illayea"Achcham Enbathu Illayea - MISSION CHAPTER 1"@LycaProductionsActor Arun VijayMISSION CHAPTER 1"
Comments (0)
Add Comment