*Silambarasan TR – Vetrimaaran – Kalaippuli S Thanu unite for ‘ARASAN’*
A grand collaboration between actor Silambarasan TR, acclaimed director Vetrimaaran, and legendary producer Kalaippuli S Thanu has officially been titled ‘ARASAN’. The title announcement was made with an exclusive poster, sending fans into celebration mode across social media.
Nationally celebrated filmmaker Vetrimaaran and renowned producer Kalaippuli S Thanu have joined hands with the ever-charismatic Silambarasan TR for what was earlier referred to as #STR49. Fans had been eagerly awaiting the official update, and the team has now revealed the much-anticipated title — ‘ARASAN’ — along with a powerful poster that hints at Silambarasan’s commanding role in the film.
Details regarding the rest of the cast, crew, and technical team will be announced soon.
Having consistently impressed audiences with his performances and versatility, Silambarasan TR is now set to reign as ‘ARASAN’, marking yet another milestone in his cinematic journey. Expectations are soaring high as fans await the royal return of their beloved star.
*சிலம்பரசன் டி ஆர் -வெற்றிமாறன்- கலைப்புலி எஸ் தாணு – கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’*
*’அரசன்’ ஆகும் சிலம்பரசன்*
சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அரசன்’ என பெயரிடப்பட்டு, அதற்கான அறிவிப்பினை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் சாதனையாளர்களாக வலம் வரும் இயக்குநர் வெற்றிமாறன் – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு- ஆகியோர் ரசிகர்களின் ஏகோபித்த அன்பையும், பாராட்டையும் பெற்ற சிலம்பரசன் டி ஆருடன் இணைந்து ‘#STR 49 ‘எனும் பெயரில் படைப்பை ஒன்றினை உருவாக்கி வருகிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்தது. இந்த நிலையில் இந்த சாதனை கூட்டணி படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதுடன்.. படத்தை பற்றிய அதிலும் குறிப்பாக சிலம்பரசனின் கதாபாத்திரம் குறித்த குறியீட்டை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மக்களின் மனங்களை வென்ற சிலம்பரசன் …அரசனாக – பேரரசனாக – திரையுலக பயணத்தில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.