Vignesh Sivan – Pradeep Ranganathan Starrer ‘Love Insurance Company’ (LIK) Released Title and First Look

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் – இயக்குநர் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு  “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ்,  மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.‌ இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் L . K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு  தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால்… இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘நானும் ரவுடிதான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் – ‘லவ் டுடே’ படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியை பெற்று, தமிழ் திரையுலகத்தின் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் – ‘மாஸ்டர்’, ‘ லியோ’ போன்ற பிரம்மாண்டமான படைப்புகளை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்-  ஆகியோரின் கூட்டணியில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ தயாராகி இருப்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்க நாதனின் பிறந்த நாளில் அவர் நடிக்கும் ‘எல் ஐ கே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால்… அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

'Love Insurance Company'(LIK)Pradeep RanganathanTitle and First LookVignesh Sivan
Comments (0)
Add Comment