“Mission Chapter 1” Thanks Giving Press Meet Event Stills & News

" }, apiUrl = 'https://api.flickr.com/services/rest/', photos = []; // The actual plugin constructor function Plugin(element, options) { this.element = jQuery(element); this.settings = jQuery.extend({}, defaults, options); this._defaults = defaults; this._name = pluginName; this._hideSpinner = function() { this.element.find('.spinner-wrapper').hide().find('*').hide(); }; this._printError = function() { this.element.find('.gallery-container').append(jQuery("
", { "class": "col-lg-12 col-lg-offset-1" }) .append(jQuery("
", { "class": "error-wrapper" }) .append(jQuery("", { "class": "label label-danger error" }) .html(this.settings.errorText)))); }; this._flickrAnimate = function() { this.element.find('.gallery-container img').each(jQuery.proxy(function(index, el) { var image = el; setTimeout(function() { jQuery(image).parent().fadeIn(); }, this.settings.loadingSpeed * index); }, this)); }; this._printGallery = function(photos) { var element = this.element.find('.gallery-container'); jQuery.each(photos, function(key, photo) { var img = jQuery('', { 'class': 'thumb img-thumbnail gall-img-responsive', src: photo.thumbnail, }); element.append(jQuery('
', { 'class': 'col-md-4 col-sm-6 wl-gallery ' + photo.hideme }) .append(jQuery('
', { 'class': 'b-link-fade b-animate-go' }) .append(jQuery('', { 'data-lightbox-gallery': 'enigma_lightbox', 'class': 'nivoz_119438', title: photo.title, href: photo.href }).hide() .append(img) .append(jQuery('
', { 'class': 'b-wrapper' }))))); }); element.imagesLoaded() .done(jQuery.proxy(this._flickrAnimate, this)) .always(jQuery.proxy(this._hideSpinner, this)); }; this._flickrPhotoset = function(photoset) { var _this = this; var hidemeval = ""; photos[photoset.id] = []; jQuery.each(photoset.photo, function(key, photo) { // hide thumbnails after a limit if(key > 29) { hidemeval = "hidepics"; } // Limit number of photos. if(key >= _this.settings.photosLimit) { return false; } photos[photoset.id][key] = { thumbnail: 'https://farm' + photo.farm + '.static.flickr.com/' + photo.server + '/' + photo.id + '_' + photo.secret + '_n.jpg', href: 'https://farm' + photo.farm + '.static.flickr.com/' + photo.server + '/' + photo.id + '_' + photo.secret + '_b.jpg', title: photo.title, hideme: hidemeval }; }); this._printGallery(photos[photoset.id]); }; this._onFlickrResponse = function(response) { if(response.stat === "ok") { this._flickrPhotoset(response.photoset); } else { this._hideSpinner(); this._printError(); } }; this._flickrRequest = function(method, data) { var url = apiUrl + "?format=json&jsoncallback=?&method=" + method + "&api_key=" + this.settings.apiKey; jQuery.each(data, function(key, value) { url += "&" + key + "=" + value; }); jQuery.ajax({ dataType: "json", url: url, context: this, success: this._onFlickrResponse }); }; this._flickrInit = function () { this._flickrRequest('flickr.photosets.getPhotos', { photoset_id: this.settings.photosetId }); }; // Init this.init(); } Plugin.prototype = { init: function () { this._flickrInit(); } }; // Wrapper jQuery.fn[pluginName] = function (options) { this.each(function () { if (!jQuery.data(this, "plugin_" + pluginName)) { jQuery.data(this, "plugin_" + pluginName, new Plugin(this, options)); } }); // Chain return this; }; })(jQuery, window, document);

“Mission Chapter 1” Thanks Giving Press Meet Event Stills

'); jQuery('.b-link-stroke').prepend('
'); /* Twist */ jQuery('.b-link-twist').prepend('
'); jQuery('.b-link-twist').prepend('
'); jQuery('.b-link-twist img').each(function(index, element) { jQuery(this).css('visibility','hidden'); jQuery(this).parent().find('.b-top-line, .b-bottom-line').css('background-image','url('+jQuery(this).attr('src')+')'); }); /* Flip */ jQuery('.b-link-flip').prepend('
'); jQuery('.b-link-flip').prepend('
'); jQuery('.b-link-flip img').each(function(index, element) { jQuery(this).css('visibility','hidden'); jQuery(this).parent().find('.b-top-line, .b-bottom-line').css('background-image','url('+jQuery(this).attr('src')+')'); }); /* Fade */ jQuery('.b-link-fade').each(function(index, element) { jQuery(this).append('
') }); /* Flow */ jQuery('.b-link-flow').each(function(index, element) { jQuery(this).append('
') }); /* Box */ jQuery('.b-link-box').prepend('
'); jQuery('.b-link-box').prepend('
'); /* Stripe */ jQuery('.b-link-stripe').each(function(index, element) { jQuery(this).prepend('
'); }); /* Apart */ jQuery('.b-link-apart-vertical, .b-link-apart-horisontal').each(function(index, element) { jQuery(this).prepend('
'); }); /* diagonal */ jQuery('.b-link-diagonal').each(function(index, element) { jQuery(this).prepend('
'); }); setTimeout("calculate_margin();", 100); });
Flickr Album Gallery Pro Powered By: wpfrank

 “Mission Chapter 1”

“Mission Chapter 1” Thanks Giving Press Meet Event Stills & News

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் சந்தீப், “ஆதரவு கொடுத்த மீடியா, பார்வையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய், அருண் விஜய், லைகா நிறுவனத்திற்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

கலை இயக்குநர் சரவணன், “இந்தப் படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுத்த பார்வையாளர்களுக்கு நன்றி. ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது இன்னும் அதிக ரெஸ்பான்ஸ் படத்திற்கு இருக்கிறது. திரையரங்குகளில் ஸ்கிரீன்ஸ் இப்போது அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அருண் விஜய் சாரின் கடின உழைப்பும் இந்தப் படம் நன்றாக வர முக்கியக் காரணம். இந்த வாய்ப்பு எனக்குக் கொடுத்த இயக்குநர் விஜய், லைகா புரொடக்ஷன்ஸ்க்கு நன்றி”.

‘ராட்சசன்’ சரவணன், “இப்படி ஒரு திறமையான படக்குழுவுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. அருண் விஜய், அபிஹாசன், ஏமி, நிமிஷா என  எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்லும் பார்வையாளர்கள், ரசிகர்களுக்கு நன்றி. படம் வெளியாகும்போது இருந்ததை விட இப்போது ஸ்கிரீன்ஸ் அதிகமாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

காஸ்ட்யூம் டிசைனர் ருச்சி, “எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எங்கள் எல்லோருக்கும் இந்த படத்தில் சிறந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. அருண் விஜய் இந்தப் படத்திற்காகக் கொடுத்த அனைத்து கடின உழைப்புக்கும் பலன் இப்போது தெரிகிறது. எங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத சிறந்த பொங்கலை கொடுத்த பார்வையாளர்களுக்கு நன்றி”.

நடிகர் அபிஹாசன் பேசியதாவது, “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மீடியாவுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. படம் பார்த்தீர்கள் என்றால் தெரியும். அந்த சிங் கதாபாத்திரம் நான் தான் நடித்திருக்கிறேன். நான் எதிர்பார்த்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்புக் கொடுத்த அருண் விஜய் சாருக்கு நன்றி. எங்கள் எல்லாருக்கும் மறக்க முடியாத பொங்கலாக மாறியிருக்கிறது”.

நடிகர் பரத் போபண்ணா, “எங்கள் படக்குழுவினர் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி பார்க்க முடிகிறது. அதற்குக் காரணமாக இருக்கும் பார்வையாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. தமிழ் சினிமாவுக்கு என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. என்னுடைய தமிழ் சினிமா பயணத்தை அருண் விஜய் சாருடன் ஆரம்பித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் நாட்களில் படம் இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது”.

படத்தின் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் “அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் அனைவரது கடின உழைப்புக்கான வெற்றி இது. பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி”.

நடிகர் அருண் விஜய் பேசியதாவது, “நல்ல கதையுள்ள படங்களை மக்களும் மீடியாவும் எப்போதும் கைவிட்டதே இல்லை. அதற்காக நன்றி சொல்லும் சந்திப்புதான் இது. ஒவ்வொரு படத்திலும் எனக்கு எதாவது ஒரு பிரச்சினை இருக்கும். இந்தப் படத்திலும் உடல் ரீதியாக நிறைய சவால்கள் இருந்தது. புதுச்சேரி, மதுரை என நாங்கள் போன இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு நான் விஜய் சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இப்படி ஒரு அழகான கதையில் என் பலத்தை அவர் சரியாக உபயோகப்படுத்தியுள்ளார். வரும் வாரத்தில் இந்தப் படத்திற்கு இன்னும் அதிக ஸ்கிரீன் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். படத்திற்கு ஆரம்பத்தில் அதிக பிரச்சினை இருந்தது. ஒரு படத்தை வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதைச் சிறப்பாக செய்திருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சாருக்கும், தமிழ்க்குமரன் சாருக்கும் நன்றி. 25 கோடி போட்டிருக்கும் இந்த புராஜெக்ட் மீது நம்பிக்கை வைத்த எங்கள் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் சாருக்கும் நன்றி. படம் வெளியாகும்போது அவ்வளவு அழுத்தங்கள் இருந்தது. அவை அனைத்தையும் எங்களுக்குத் தராமல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த வெற்றி அவர்களைத்தான் சாரும். நீங்கள் தரும் ஆதரவுதான் என்னை புதுப்புது கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறது. உங்களை கதையுடன் கனெக்ட் செய்யும் படங்களைத்தான் இனி தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி. வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ். வரும் நாட்களில் உங்கள் நேரத்திற்கு ஏற்றாற் போல, நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். நன்றி”.

குழந்தை நட்சத்திரம் இயல், “படத்தை ஹிட் ஆக்கிய எல்லோருக்கும் தேங்க்ஸ்!”

நடிகர் ருத்ரா, “இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. இந்தப் படம் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்த வருடம் எங்களுக்கு சிறப்பாகத் தொடங்கியுள்ளது. அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் விஜய், “எங்கள் எல்லோருக்கும் சிறப்பான வருடம் இது. இந்த தேங்க்ஸ் மீட் எதற்கு என்று முதலில் சொல்லி விடுகிறேன். படம் வெளியாகும்போது எங்களுக்குத் திரையரங்குகள் குறைவாகவே கிடைத்தது.  இரண்டு பெரிய படங்கள் வருகிறது எனும்போது எங்களுக்கு அப்படி அமைந்து விட்டது. எங்கோ பிரிவியூ ஷோ போவது போலதான் இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியான ஒரு ஃபீல் கிடைக்கவே இல்லை. ஆனால், படத்தில் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. அடுத்தடுத்து நீங்கள் புஷ் செய்வதுதான் படத்தை இன்னும் அதிக பார்வையாளர்களுக்குக் கொண்டு போகும் என மோகன் சார், விஜயகுமார் சார் சொன்னார்கள். அதன்படிதான் நாங்கள் நடந்து கொண்டு வருகிறோம். படத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல லைகா சரண் சார், சுரேஷ் சந்திரா சார், ஷ்யாம் சார் என அனைவரும் சேர்ந்து உழைத்தோம். படத்திற்கான ரெஸ்பான்ஸ் பார்த்துவிட்டு தானாகவே ஸ்கிரீன் அதிகப்படுத்தினார்கள். இன்றைய தேதியில் நிறைய திரையரங்குகளில் நிறைய ஸ்கிரீன்கள் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் மீது அந்த நம்பிக்கையை கொடுத்த மீடியா விமர்சனங்களுக்கு நன்றி. இப்போதுதான் எங்களுக்கு முதல் வாரம் போல. நீங்கள் அடுத்தடுத்து கொடுக்கும் ஆதரவுதான் எங்களை இன்னும் அடுத்துச் செல்லும். என்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து வேறொரு ஜானரில் நான் செய்திருக்கும் படம் இது. பட்ஜெட் பெரிதாகத் தேவைப்படுகிறது எனச் சொன்னபோது, அதற்கு முழு ஆதரவுக் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் லைகாவுக்கும் நன்றி. அந்த அளவுக்கு படத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.  ‘அச்சம் என்பது இல்லையே’ என இருந்த படத்தின் டைட்டிலை ‘மிஷன்’ என மாற்றி அனைத்து மொழிகளுக்கும் எடுத்துச் சென்ற லைகா சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ்க்குமரனுக்கும் நன்றி. படப்பிடிப்பில் செட் பலமுறை விழுந்து, மீண்டும் அதை உருவாக்கினோம். இப்படி படப்பிடிப்பில் இருந்து ரிலீஸ் வரை பல சிக்கல்கள் எங்களுக்கு இருந்தது. அதற்கெல்லாம் நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். படத்திற்கு பாசிட்டிவான ஆதரவு கொடுத்து எடுத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பெரிய பலம். அருண் விஜய் சார், இயல், அபிஹாசன், ஏமி, நிமிஷா, பரத், சரவணன், ராமலிங்கம் மேஸ்திரி என அனைவருக்கும் நன்றி. படம் இன்று இவ்வளவு பெரிதாகத் தெரிய இவர்கள் தான் காரணம். படத்தில் முக்கியமான விஷயம் கதைதான். அதைக் கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படத்தில் மொட்டை மாடியில் இருந்து அருண் விஜய் சார் குதிக்கும் காட்சி ஒன்று வரும். அது சிஜி கிடையாது. டூப் போடாமல் அவரே செய்தார். அது மேஜிக் போல நடந்துவிட்டது. அந்தத் தருணங்களில் எங்களுக்கு பாதுகாப்பைச் சரியாக செய்து தந்த செல்வா மாஸ்டருக்கு நன்றி. பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் மீண்டும் நன்றி!”.


 
 

 

"Mission Chapter 1" Movie"Mission Chapter 1" Thanks Giving Press Meet Event Stills & NewsActor Arun Vijay
Share
Comments (0)
Add Comment