“Kannethirey Thondrinaal ” – Kalaignar TV mega series

 

சிவாவுக்கு வந்த பழைய ஞாபகங்கள் – சக்தியுடன் மீண்டும் இணைவாரா..?

“கண்ணெதிரே தோன்றினாள்”– மெகாத்தொடர்

 

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது “கண்ணெதிரே தோன்றினாள்” மெகாத்தொடர்.

சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது தொடரில் மணிவண்ணன், பூமிநாதன் இருவரும் சக்தி பற்றிய உண்மைகளை சிவாவிடம் சொல்ல, குழப்பத்தில் தடுமாறும் சிவாவுக்கு எதிர்பாராமல் சந்தோஷ் செய்யும் சூழ்ச்சி, பழைய நினைவுகளை நியாபகப்படுத்த, சக்தி பற்றிய உண்மைகள் அனைத்தையும் சிவா தெரிந்து கொள்கிறார்.

மறுபுறத்தில் சிவாவுக்கு எதிராக அனிதா, இந்து செய்த சதிகள் ருத்ராவின் பார்வைக்கு வர, ருத்ரா அனிதாவை துருவி துருவி கேள்வி கேட்க, அதிர்ச்சியில் அனிதா மயக்கமடைகிறாள். மறுபுறம் அருணை பிரிந்து தன் தாய் இந்துவுடன் வாழும் திவ்யாவுக்கு இந்து, ரத்னத்தை சிறையில் சென்று பார்த்தது ஏன் என்ற குழப்பம் வர, திவ்யாவின் குழப்பத்துக்கு பதில் கிடைக்குமா? ருத்ராவிடம் அனிதா சிக்குவாளா? சிவா – சக்தி மீண்டும் இணைவார்களா? என்கிற பரபரப்போடு  தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

Kalaignar TVKannethirey Thondrinaalmega seriesMonday to Saturday at 8.30pm
Comments (0)
Add Comment