A mass poster of Kamal Haasan’s next film has been released and it’s getting viral in social media

‘ உலகநாயகன் ‘ கமல்ஹாசன் நடிக்க உள்ள அடுத்த படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் கமல்ஹாசன் அடுத்ததாக ‘ பாகுபலி ‘ பிரபாஸ் நடிக்க இருக்கும் ‘கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இந்த படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஆறு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. ’நடிகையர் திலகம்’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை அடுத்து அவரது கேரக்டரின் மாஸ் போஸ்டர் வெளியானது. மேலும் இந்த படத்தில் அமிதாப்பச்சன் இணைவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்று படக்குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

'Indian 2' movie'Kalki 2898 AD'A mass poster of Kamal Haasansocial mediaviral on the internet.
Comments (0)
Add Comment