International Institute of Film and Culture (IIFC) will be conducting entrance examination on 24th October 2021 at five different cities (Chennai, Tiruchirapalli, Madurai, Tiruppur and Tirunelveli). Total of 1450 students will take up this exam to win 100% granted one year post graduate diploma in film making. Admitted students will be taught and mentored by leading cinema professionals and stalwarts of the film industry. The Institute is committed to identify raw and original talents primarily across the districts of Thamizh Nadu, and to provide a conducive ambience to nurture and refine their cine-tech skills, emerging eventually as ‘serious entertainers’. This institute is brainchild of Director Vetri Maaran, Rev. Dr. S. Rajanayagam and Mr. Vetri Duraisamy.
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய தமிழக மாணவர்களுக்காக இயக்குனர் வெற்றி மாறன், டாக்டர். ராஜ நாயகம் மற்றும் வெற்றி துரைசாமி ஆகியோரின் முன்னெடுப்பில் கடந்த ஏப்ரல் 2021 இல் தமிழ்ப் புத்தாண்டு அன்று திரை- பண்பாட்டு ஆய்வகம்(IIFC) தொடங்கப்பட்டது.
இணையத்தளம் : https://www.iifcinstitute.com/
ஆய்வகத்தின் சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக, இரண்டாம் சுற்று எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 5 இடங்களில் (சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், திருநெல்வேலி ) அக்டோபர் 24 அன்று நடக்கவிருக்கிறது.
மொத்தம் 1450 மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கிறார்கள். திரை- பண்பாட்டு ஆய்வகம்(IIFC) அதன் முதுகலை பட்டயப்படிப்பின் முதல் ஆண்டில் 40 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளது. பட்டயப்படிப்பின் கல்வி காலம் 1 வருடம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி, தங்குமிடம் மற்றும் உணவுக்கு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—
—