ஆக்கப்பூர்வமான விவாத நிகழ்ச்சியாக திகழும் “நேர்படப் பேசு” திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
கட்சிகளின் அரசியல் தொடங்கி மக்களை பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் விவாதிக்கும் நிகழ்ச்சி நேர்படப் பேசு.
கட்சிகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் எதிர் எதிர் துருவங்களாக பிரிந்து நின்று கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் சூடான நிகழ்ச்சி நேர்படப்பேசு.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் வெகுஜனத்தை அரசியல் மயப்படுத்துவதில் முன்னோடி நிகழ்ச்சி நேர்படப் பேசு.
இந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர் கார்த்திக்குமார் ஒருங்கிணைக்க க.கார்த்திகேயன், விஜயன் ச.திலகவதி, வேதவள்ளி, தமிழினியன் ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர்.