குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை செய்யும் அரக்கர்களை  மெய்ப்பட தண்டிக்கும் மெய்ப்பட செய்.

66


எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி என்கிற பி.ஆர்.தமிழ்செல்வம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள படம் தான் மெய்ப்பட செய்.

தாய்மையையும், பெண்மையையும் போற்றும் நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் வன்கொடுமை பெருகி வருகின்றது. அதற்கான தண்டனைகளோ, பாலியல் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளோ சட்டப்படி நடப்பதில்லை. ஆனால் ஒரு குற்றம் நடந்த பிறகு அதற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதல் தொகை யையும் கொடுப்பதை விட அந்த குற்றம் நடக்கவே கூடாது என்று சட்டம் இயற்றினால் மட்டுமே இங்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நிகழாமல் இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இப்படி சமூக அக்கறையோடு கிராமத்தில் வாழும் நான்கு நண்பர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது காதல் மனைவியோடு சென்னை வர நேரிடுகிறது. சென்னையில் வாழ வழி தேடும் அவர்கள் கண்முன்னே பாலியல் குற்றவாளிகளின் கொலைவெறியாட்டத்தை காண நேரிடுகிறது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து பகிரங்கமாக மக்களையும் காவல்துறையையும் தங்களது ரவுடியிசத்தாலும், ஆளுமையாலும் அடி பணிய வைத்து சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கும்பலை தனி மனிதர்களாக இந்த கிராமத்து இளைஞர்கள் போராடி சமுதாயத்துக்கு முன் குற்றவாளிகளை தோலுரித்து காட்டியும், மக்களுக்கான நம் நாட்டின் சட்டம் தப்பு செய்தவர்களை தண்டித்ததா இல்லை குற்றவாளிகளை உருவாக்கியதா என்பதை இத்திரைபடம் பேசுகிறது
இதில் ஆதவ் பாலாஜி, மது நிக்கா நடிக்க. முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ்செல்வம் நடித்துள்ளார். மேலும் ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், விஜய கணேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி. ஞானப்பிரகாசம், சிவா, அட்டு முத்து, ராகுல் தாத்தா, அனீஸ், எமில் கணபதி, ராகவ மூர்த்தி, திண்டுக்கல் தனம், காஞ்சனா, தீபா, யமுனா உட்பட பலர் நடித்துள்ளனர்.

பார்வை ஒன்றே போதுமே. பெரியண்ணா. சாப்ளின் போன்ற படங்களில் பாடல்கள் மூலம் கவனிக்க வைத்தவர் இசைய மைப்பாளர் பரணி. அவரது இசையில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. மீண்டும் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் பரணி பட்டி தொட்டி எங்கும் பேசப்படுவார். குறிப்பாக நாயகன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாரதமே பாரதமே என்கிற பாடல் கேட்பவரையும் பார்ப்பவரை நிச்சயம் கண்கலங்க வைக்கும். நடனத்தை தீனா மாஸ்டர் ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான நடன அசைவுகளை கொடுத்து அசத்தியுள்ளார். மிரட்டல் செல்வாவின் சண்டை பயிற்சியில் நான்கு சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் பாலியல் குற்றவாளிகளை களையெடுக்க ஒரு தீர்வாக கதை அமைத்து திரைக்கதை வசனம் எழுதி அறிமுக இயக்குனர் வேலன் சிறப்பாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் இந்தப் படத்திற்கு பக்கபலமாக கதை ஓட்டத்தோடு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன், சித்திரம் பேசுதடி-2, ஆடாம ஜெயிச்சோமடா. பரமகுரு ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணிபுரிந்த கே.ஜே.வெங்கட்ரமணன் இப்படத்திற்கு சிறப்பான படத்தொகுப்பை கொடுத்துள்ளார்.மக்கள் தொடர்பு தர்மதுரை மற்றும் சுரேஷ் சுகு இருவரும் பணியாற்றி உள்ளார்
படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது மற்றும் படத்தில் இடம்பெற்ற கஞ்சா பிசினறியே என்ற பாடல் ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது.
சமூக அக்கறை உள்ள படங்கள் தமிழ் சினிமாவில் அத்தி பூத்தார் போலதான் வருகிறது , அப்படி ஒரு படமாக இந்த மெய்ப்படசெய் திரைப்படம் ஜனவரி 27 இல் உங்கள் அபிமான திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை ஈர்க்கும்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com