Actor Vishal solved the drinking water problem of Thoothukudi People

149

தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் Vishal34 புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் நடிகர் விஷால் அவர்களை சந்தித்து குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் கஷ்டம் படுவதாகவும் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்,
அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றுவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்த நடிகர் விஷால்,
அதன்படி தனது மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திரு.பிரகாஷ் அவர்கள் M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து கலந்தாய்வு செய்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம் மக்கள் பயன்பெறும் வகையில் நடிகர் விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளை கிணறு (போர் போடும்) வேலை முடித்து பொது மக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் அவர்களுக்கு 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வசதி செயல் திட்டம் செயல்பட்டு வருகிறது. அம்மக்கள் கொடுத்த கேரிக்கையை உடனே நிறைவேற்றிய நடிகர் விஷால் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி கூறி பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com