சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து மறைந்த முதலமைச்சரின் தாயாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் விஜய் சேதுபதி
800 படத்திலிருந்து விலகி விட்டீர்களா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்று பதிலளித்தார் நன்றி வணக்கம் என்றால் முற்றுப்புள்ளி வைத்ததாக தான் அர்த்தம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இதைப்பற்றி பேச வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
பேட்டி
விஜய்சேதுபதி
நடிகர்