வெள்ளை யானை, சங்கத் தலைவன், எம்ஜிஆர் மகன், ட்ரெய்னர், 1947 உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து நம்மை மிரட்டியவர் ஜூனியர் எம்ஜிஆர். அதுமட்டுமின்றி இரும்பன், கங்கை கொண்டான் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது முன்னணி நடிகர் நடித்துவரும் மிகப் பெரிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படி ஹீரோ, வில்லன் எந்த வேடம் என்றாலும் திறமையை நிரூபித்து வருகிறார். விரைவில் இவரது நடிப்பில் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது