நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இனிய தமிழ் புத்தாண்டில் அனைவருக்கும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இனிதே உதயமாகும் சித்திரை -1 இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

241

நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இனிய தமிழ் புத்தாண்டில் அனைவருக்கும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இனிதே உதயமாகும் சித்திரை -1 இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

புரட்சித்தளபதி விஷால் அவர்களின் ஆணைக்கிணங்க மக்கள் நல இயக்கத்தின் சார்பில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தல் மற்றும் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்கும் நிகழ்வு

இடம் : 2/3, விஜயலட்சுமி தெரு, மகாலிங்கபுரம், சென்னை, நேரம்: காலை 9.00மணி.

மக்கள் பணி செய்வது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் மக்கள் நல இயக்கம், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மக்களின் தாகத்தினை தணிக்கும் வகையில் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி விட்ட நிலையில் மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அன்பிற்கினிய சொந்தங்கள் ஆங்காங்கே தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை அமைத்து பொதுமக்களின் தாகத்தினை தணித்திட வேண்டும்.

“கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் மனிதர்களைப் போல பிற உயிர்களையும் அதிகமாகப் பாதிக்கும் நிலையில் அவற்றை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க அவைகளுக்கும் தாகம் தீர்க்க தண்ணீர் குவளைகள் வைத்து தேவையான உதவிகள் செய்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

V.ஹரிகிருஷ்ணன் செயலாளர், மக்கள் நல இயக்கம்.
Ex. தலைவர்,மேற்கு மாம்பலம் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com