நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீரசமர்.
பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உதவியாளராக சினிமாவுக்குள் நுழைந்த வீரசமர், பல பிரபல படங்களுக்கு அவருடன் பணியாற்றினார்.
‘வீரசேகரன்’ என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் அறிமுகமானவர். அமலாபாலுக்கு முதல் கதாநாயகன் வீரசமர் தான்!
காதல், வெயில், பூ, பாண்டி, வீரசேகரன், முத்துக்கு முத்தாக, வேலாயுதம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், கொம்பன், ஒரு கிடாயின் கருணை மனு, கடைக்குட்டி சிங்கம், குடிமகன், நம்ம வீட்டுப் பிள்ளை, ஜாக்பாட், தண்ணி வண்டி, டிஎஸ்பி, யாதும் ஊரே யாவரும் கேளீர், தமிழ் குடிமகன், 1943 கப்பல்லேறிய தமிழன், பித்தளை மாத்தி, விழா நாயகன் என 30′ படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இதில் பல படங்களுக்கு இவர் தான் ஆர்ட் டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது!
தற்போது நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இளைய பாலா இயக்கத்தில் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் ‘VJS-49’ படத்தில் ஆர்ட் டைரக்டராகவும் பணிபுரிகிறார். அதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
தொடக்க காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வீரசமர், பிறகு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி, சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும், சில படங்களில் முக்கிய கதா பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் வீரசமர், தான் கற்று கைதேர்ந்த ஆர்ட் டைரக்ஷன் வேலைகளையும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.
பிரபல நடிகர்களின் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற அயராது நடித்து வருகிறார் வீரசமர்.
மதுரை உசிலம்பட்டியில் இருந்து சென்னை வந்து, ஆர்ட் டைரக்டராகவும், நடிகராகவும் வலம் வந்தாலும், இன்னும் மண்மனம் மாறாமல் அனைவரிடமும் எதார்த்தமாக பழகி வருகிறார் வீரசமர்.
தற்போது பெரிய நடிகர்களோடு இணைந்து பல படங்கள் நடித்து வருகிறார். 2025 இல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை, தனக்கென தக்க வைத்துக் கொள்வார் வீரசமர்!