திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இயக்குநர் பிரபு ஜெயராம்- தீபா திருமணம்!

75

திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இயக்குநர் பிரபு ஜெயராம்- தீபா திருமணம்!

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் பிரபு ஜெயராம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மற்றும் இடஒதுக்கீடு போன்ற கருத்துகளையும் இந்தப் படத்தில் தைரியமாகப் பேசி கவனம் ஈர்த்தார் பிரபு ஜெயராம். இப்போது பேஷன் ஸ்டுடியோஸ் இயக்கத்தில் தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். எம்.இ. முடித்துவிட்டு கல்லூரி ஒன்றில் புரொஃபசராக பணியாற்றி வரும் தீபாவுடன் இவருக்குத் திருமணம் சென்னை வடபழனியில் கடந்த ஞாயிறன்று இனிதே நடந்தது. இந்த ஜோடியின் திருமணத்தில் நடிகர்கள் அருண் பாண்டியன், விஜய் ஆண்டனி, வடிவுக்கரசி, மன்சூர் அலிகான் மற்றும் இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சரண் என ஏராளமானத் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com