“GreenHouse Barbe cue”
கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளையை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்!
2019ஆம் ஆண்டில் இதன் முதல் கிளை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டதில் இருந்து பார்பிக்யூ பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்து வருகிறது. செயற்கை உணவூட்டிகளோ நிறமூட்டிகளோ எதுவும் இல்லாமல் இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட பொருட்களையே கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ பயன்படுத்துகிறது. இதன் தரம், அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்கள் சேவை போன்றவையே கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் வெற்றி ரகசியம். இதன் முதல் கிளையை போலவே மேம்படுத்தப்பட்ட டைனிங் அனுபவத்தை தி.நகர் கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ வாடிக்கையாளர்களுக்குத் தர இருக்கிறது.
இந்த புதிய கிளையில் உள்ள பஃபேயில் சூப், ஸ்டார்டர், சாலட், கபாப், இனிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் கிடைக்கும். இதன் மெனு வாரந்தோறும் மாறும். கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவை அபிஷேக் என் முரளி, அக்ஷயா முரளி, சாய் காஷ்யப் மற்றும் மறைந்த டாக்டர்-செஃப் சௌந்தரராஜன் ஆகியோர் இந்த உணவகத்தின் மெனு, அதன் சுவை மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆகவே, வாடிக்கையாளர்களுக்கு இதன் இரண்டாவது கிளை திறப்பு என்பது கொண்டாட்டம் ஆகும்