இனி தான் ஆட்டம் ஆரம்பம்! நம்ம #ColorsTamil-ல SouthAfrica #SA20League-ஐ தமிழில் காணுங்கள் XX23-ல்

207

இனி தான் ஆட்டம் ஆரம்பம்!

கிரிக்கெட் பிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் ஜனவரி 10ம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவின் T20 லீக் போட்டியை ஒளிபரப்பு செய்யும் கலர்ஸ் தமிழ்

புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், Viacom18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் ஒரு சிறப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியிலிருந்து தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் நேரடி பிரீமியரை ஒளிபரப்புவதற்கான செயற்கைக்கோள் உரிமையைப் கலர்ஸ் தமிழ் சேனல் பெற்று அதை ஒளிபரப்பு செய்ய தயாராகி வருகிறது. இந்த போட்டி அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் மிகுந்த ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்க போகிறது.

டுவென்டி20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேபிடல்ஸ், டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் மற்றும் எம்ஐ கேப் டவுன் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன. அனைத்து அணிகளும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன் ஒரு சுற்றில் இருமுறை விளையாடுவர். நான்கு வாரங்களில் 33 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், சர்வதேச நட்சத்திரங்களான டேவிட் மில்லர், ஃபாஃப் டு பிளெசிஸ், ககிசோ ரபாடா, குயின்டன் டி காக், தீக்ஷனா, லியாம் லிவிங்ஸ்டன், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்ட பலர் சிறப்பாக விளையாடுவதை கண்டு பார்வையாளர்கள் நிச்சயம் எல்லைகளை தாண்டிய பரவசம் அடைவார்கள். உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரரின் ஜெர்சியைப் அணிந்து கொண்டு அவர்களை உற்சாகமூட்டும் விதமாக வரும் டி20 லீக் போட்டியை கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com