மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திரு. ராஜேஷ் ஜெகநாதன் இணைந்து நடத்திய இருதய மருத்துவ முகாம்
இந்த முகாம் மூலம் பல நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பயனடைந்தனர். நம் அன்றாட வாழ்வில் உள்ள மன அழுத்தம், வாழ்வு முறையால் ஏற்படும் இதய பாதிப்புகளையும் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால் எவ்வாறு உயிரை காக்க முடியும் என்பதையும் மருத்துவர் டாக்டர். தீபா முத்துகுமார் எடுத்துரைத்தார்.
இந்த முகாமில் முழு இருதயநோய் கண்டறியும் இரண்டு நாள் முகாம் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளபடுகின்றன. இதன் சிறப்பு அம்சமாக ஒரு குடும்பத்தில் இருவர் பயனடையும் வகையில் மருத்துவ பரிசோதனை அட்டையை மாண்புமிகு நீதிஅரசர் திரு. கிருஷ்ணகுமார் வெளியிட்டார். முதல் இருதய பரிசோதனையை மாண்புமிகு நீதிபதி தண்டபாணி அவர்கள் செய்து கொண்டார்.