ஜியோசினிமாவில் ஹோம் ஆஃப் தி hi புளூஸ்-இந்தியா ஹீரோஸ்…

96

Thank

ஜியோசினிமாவின் ‘ஹோம் ஆஃப் தி ப்ளூஸ் – இந்தியா ஹீரோஸ்’ குறித்த உரையாடலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தனது பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் மற்றும் கடைசிக்கட்ட ஓவர்களின்போது அவர் எவ்வாறு செயல்படப் போகிறார் என்பது குறித்து பேசினார்.
“காயத்திலிருந்து மீண்டு வந்தது முதல் அவர் இதுவரை 5 அல்லது 6 ஓவர்கள்தான் வீசியுள்ளார். ரோஹித் சர்மா அவருடன் இணைந்து இருக்கிறார், புதிய பந்தில் அவர் எவ்வளவு திறம்பட பந்துவீசி செயல்பட முடியும் என்பதை அவர் கண்காணித்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நாங்கள் வெளியேற்ற விரும்பினால், அதற்கு சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளனர். அவர் பந்து வீசும் லைன் மற்றும் வேகம், அது விக்கெட்டில் முழுவதுமாக ஸ்விங் செய்கிறது என்பது நிச்சயம். அவரது ரன்-அப்பில் கூட, அவரது வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்திருப்பதை நீங்கள் காண முடியும். அவரது ஃபினிஷிங் லைனில் உள்ள ஸ்விங் பாராட்டத்தக்கது. குறிப்பாக முதுகு மற்றும் முழங்காலில் ஏற்பட்ட காயங்களுடன் அவர் மிகவும் கடினமாக உழைத்து மீண்டு வந்துள்ளார். ரன்-அப்புக்குப் பிறகு, அவர் மீட்டுள்ள கூடுதல் நான்கு அல்லது ஐந்து கெஜங்கள், அவரது வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவை மீண்டும் வந்துள்ளன. அவரது பந்து வீச்சுகளின் நீளத்துடன் அவர் பெற்றுள்ள வேகம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் தற்போதைய பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது, ஆனால் பும்ராவின் ஓவர்களை சமாளிப்பதற்கு அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். ஏனெனில் அவர் 140 முதல் 145 கிலோமீட்டர் என்ற வேகத்தில் அவர் வீசுகிறார். அவர் மிகவும் கடினமாக உழைத்து அதை அனுபவித்து வருவதை நாம் காண முடியும். அவர் மீண்டும் ‘பூம் பூம் பும்ரா’ ஆகப் போகிறார் என்று தெரிகிறது” என்று தெரிவித்தார்.

முன்னாள் இந்திய வீரர் அபிநவ் முகுந்த் கூறும்போது, பும்ரா போதிய ஆட்டங்களில் பங்கேற்காதது பிரச்சினையாக இருக்குமா என்பது குறித்து விவாதித்தார். அவர் மேலும் கூறும்போது, “போதிய ஆட்டங்களில் அவர் பங்கேற்காதது பிரச்சினையாக இருக்கும் என்று தெரியவில்லை. அவர் எப்படி விளையாடப் போகிறார் என்று நான் சற்று தயக்கத்துடன் எதிர்நோக்கினேன். ஆனால் அவர் விட்ட இடத்தில் இருந்து திரும்பி வந்துள்ளார். ஆபத்தான காயம் இருந்தபோதிலும், அவர் நிறைய கிரிக்கெட் விளையாடவில்லை, மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தார். ஆனால் அவர் மீண்டு வந்து அற்புதமாக பந்துவீசினார். என்னைப் பொறுத்தவரை, அவர் அணிக்கு திரும்பியுள்ள ரோஹித் சர்மாவை உற்சாகப்படுத்தி உள்ளது. பும்ராவுடன் சேர்ந்து அனைத்து ஐபிஎல் பட்டங்களையும் ரோஹித் வென்ற பிறகு, பும்ராவைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பற்றி ரோஹித் மிகவும் உற்சாகமாக இருப்பதாக நான் உணர்கிறேன். களத்தில் ஒரு விக்கெட்டை எடுக்க விரும்பும் சூழ்நிலையில், அவர் நம்பிக்கை வைத்து பந்தை, ஜஸ்பிரீத் பும்ராவிடம் கொடுக்கிறார். எனவே, பும்ரா அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அணி நிர்வாகம் தெரிந்து வைத்துள்ளது. இந்த தொடரின் போது, கடைசிக் கட்ட ஓவர்களில் அவரது பந்துவீச்சு பரிசோதிக்கப்பட்டு, ஆஸ்திரேலிய மிடில் ஆர்டரை வீழ்த்த அவர் அழைத்து வரப்படுவார். எனவே, அவர் தனது முழு திறமைகளையும் கொண்டு வர வேண்டும்” என்றார்.

சுரேஷ் ரெய்னா கூறும்போது, “ஆசியக் கோப்பை போட்டிகளில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். இப்படித்தான் விளையாடுவார் என நான் எதிர்பார்த்த வகையில் அவர் அருமையாக விளையாடினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் சிரமப்பட்ட போதிலும், ஆசியக் கோப்பையில் அபாரமாக விளையாடி ரன்களைக் குவித்தார். அவர் நேர்மறையாக விளையாடுகிறார், நல்ல ஃபுட்வொர்க்கைப் பயன்படுத்துகிறார், மேலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 40 ரன்களில் அவுட் ஆனதில் இருந்து, அவர் இப்போது சிறப்பாக 50 மற்றும் 100 ரன்களை அடித்துள்ளார். உலகக் கோப்பையில் அவர் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கிறேன். அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்க விரும்புகிறார் என்பதும், அடுத்த விராட் கோலி ஆக விரும்புவதும் எனக்கு தெரியும், ஏற்கனவே அந்த வளையத்தில்தான் இருக்கிறார். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு, நாங்கள் அவரைப் பற்றி அடிக்கடி பேசுவோம். மட்டைவீச்சின்போது அவரது கை வேகம் அபாரம். அந்த விளையாடும் வடிவம் அவருக்கு மிகவும் வலிமையைத் தந்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அவருக்கு எந்த இடத்தில் பந்து வீசுவது என்று தெரியவில்லை. மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் அவருக்கு பந்தை ஸ்விங் செய்யவில்லை என்றால், அவர் நேராக அல்லது ஒரு ஃபிளிக் மூலம் நன்றாக விளையாடி ரன்களைக் குவிக்க முடியும். அவருடைய எண்ணம் இதோடு நின்றுவிடாது. 2019 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா என்ன செய்தாரோ, இந்த ஆண்டு இந்தியாவுக்காக கில் அதையே செய்ய முடியும். அவர் பேட்டிங் செய்ய முழுமையாக 50 ஓவர்கள் கிடைக்கும், எனவே இது அவரது பேட்டிங்குக்கு ஒரு டேக் ஆஃப் பாயிண்ட்டாக இருக்கும். அவர் ஒரு பிறப்பிலேயே கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன், அதை அவர் தனது விளையாட்டில் காட்டுகிறார்” என்றார்.

இந்தியாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரடியாக செப்டம்பர் 22-ம் தேதி முதல் ஜியோசினிமாவில் 11 மொழிகளில் காண முடியும். ஸீனியர்/ ஆப்லைன் டி.வி. வரிசையில் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் கலர்ஸ் தமிழ் (தமிழ்), கலர்ஸ் பங்களா சினிமா (பெங்காலி), கலர்ஸ் கன்னடா சினிமா (கன்னடா), கலர்ஸ் சினிபிளக்ஸ் சூப்பர்ஹிட்ஸ் (ஹிந்தி), ஸ்போர்ட்ஸ்18-1எஸ்டி, ஸ்போர்ட்ஸ் 18-1எச்டி (இங்கிலிஷ்) ஆகிய சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com