உண்மையாக நடந்த ஒரு கடத்தலை கருவாக வைத்து உருவாகி வரும் படம் ” கடத்தல் ” சலங்கை துரை இயக்குகிறார்.

160
Header Aside Logo

                                      

S.நிர்மலா தேவி நல்லாசியுடன் சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் சலங்கை துரை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் படம் “கடத்தல்”

கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ் தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ பி கோ 302 படங்களுக்கு பிறகு சலங்கை துரை இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதாநாயகனாக MR தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். அம்மாவாக சுதா,கலக்கல் காமெடிக்கு சிங்கம் புலி, மற்றும் பாபு தமிழ் வாணன், ஆதி வெங்கடாச்சலம்,நிழல்கள் ரவி க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி,மாஸ்டர் தருண் ரெட்டி, பிரவீன், மற்றும்பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – MV. பன்னீர்செல்வம்&ராஜ்செல்வா
இசை – தனசீலன்
பாடல்கள் – பாவலர் எழில் வாணன்,இலக்கியன்,
சக்தி பெருமாள்
எடிட்டிங் – AL. ரமேஷ்
சண்டை பயிற்சி – சந்துரு
நடனம் – ரோஷன் ரமணா
தயாரிப்பு மேற்பார்வை – மல்லியம்பட்டி மாதவன்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
நிழற்படம் – தஞ்சை ரமேஷ்
டிஸைன்ஸ் – விக்னேஷ் செல்வன்
இணை தயாரிப்பு – MR. தாமோதரன்- N. ரமேஷ்

படம் பற்றி இயக்குனர் சலங்கை துரை கூறியதாவது…

ஒரு முக்கியமான
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதிரடி திருப்பங்களுடன் கூடிய ஆக்சன் திரைப்படமாக வெளிவர இருக்கிறது “கடத்தல்”
எப்போது நடந்த கடத்தல், எங்கே நடந்த கடத்தல், யார் நடத்திய கடத்தல் என்று படம் வெளியான பிறகு அனைவராலும் பரபரப்பாக பேசப்படும்.
சென்னையில் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com