“ரஜினிகாந்த் மற்றும் விவேக்கின் பாராட்டுக்கள் மறக்க முடியாதவை” – நடிகர் வெற்றி

761

Vetri Actor Gallery

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

‘8 தோட்டாக்கள்’ மூலம் நாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப் பெற்று, ‘ஜீவி’ படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர் நடிகர் வெற்றி. தற்போது 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் விவரங்களை பகிர்ந்து கொண்டதாவது :-

‘கேர் ஆஃப் காதல்’, இப்படம் ‘கேர் ஆப் கச்சிராப்பலம்’ என்ற
தெலுங்கு படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘இறுதிச்சுற்று’ படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் ‘தாடி’. பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இந்த படத்திற்கு பிறகு ‘வனம்’ படம் வெளியாகும்.
‘தடம்’ படத்தின் நாயகியாக நடித்த ஸ்ம்ருதி இந்த படத்திலும் நாயகியாக நடிக்கிறார். கலை கல்லூரியில் சிற்ப கலை பயிலும் மாணவனாக நடிக்கிறேன். பூர்வ ஜென்மத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
மூணாறு அருகே உள்ள காட்டில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படத்தின் இறுதி காட்சிக்காக வித்தியாசமான முறையில் சண்டைக் காட்சியை அமைத்திருக்கிறோம். அக்காட்சி அனைவரிடத்திலும் பேசப்படும்.

குரு ராமானுஜம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.

முதல் இரண்டு படங்களிலும் கதைக்கு தேவைப்படாததால் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்கவில்லை. முதலில் நான் கதை கேட்பேன். எனக்கு பிடித்திருந்தால் சம்மதம் தெரிவிப்பேன். சிறிது குழப்பமாக இருந்தால் எனது சகோதரர் மற்றும் அப்பாவுடன் கதை கேட்டு முடிவு செய்வேன். பல கதைகள் கேட்டு அவற்றில் 5 கதைகளைத் தேர்வு செய்திருக்கிறேன். இதன் பிறகு சொந்த தயாரிப்பில் ஈடுபடுவேன். இயக்கத்தில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இல்லை.

‘8 தோட்டாக்கள்’ பார்த்து ரஜினிகாந்த் பாராட்டினார். ‘ஜீவி’ பார்த்து விவேக் பாராட்டினார். இரண்டுமே மறக்க முடியாத பாராட்டுக்கள்.

எனக்கு ரோல் மாடல் என்று யாருமில்லை. எனக்குள்ள திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நடித்து வருகிறேன்.

இவ்வாறு தான் நடித்து வரும் படங்களைப் பற்றி நடிகர் வெற்றி பகிர்ந்துக் கொண்டார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com