Music Director Sam CS – Winner with Maximum Musical Releases in 2019

The additional highlight about Sam CS’s musical journey in 2019 is that he happens to be the music director with more number of releases in 2019, which are 8 albums. This includes Kaithi, Ispade Rajavum Idhaya Raniyum, Devi 2, Jada, Ayogya, Gorilla, K13 and 100.
ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சிமொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்கு பின்னணி இசை மிக முக்கியம். சென்ற ஆண்டில் தான் இசை அமைத்த எல்லாப்படங்களுக்கும் அதைத் தவறாமல் தந்திருந்தார் சாம்.சி எஸ். கைதி படத்தில் இருட்டுப் பாதையில் படரும் பதட்டத்தை இசை வழியே மிக அற்புதமாக கடத்தியிருப்பார். இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படத்தில் காதலர்களை ஏங்கவிடும் அளவிற்கு கச்சிதமான இசையை வழங்கி இருப்பார். மேலும் அவர் இசை அமைத்ததில் கே13, 100, அயோக்யா ஆகிய திரில்லர் படங்களுக்கும் , தேவி 2 , ஜடா போன்ற ஹாரர் படங்களுக்கும் அதன் கதையோட்டம் கொஞ்சமும் குறையாமல் தன் இசையால் ரசிகர்களை கவனிக்க வைத்தார்! அப்படங்களின் சுவாரசியத்தை தன் இசையால் மிக அழகாக கடத்தியிருந்தார் சாம்.சி.எஸ். பின்னணி இசை போலவே அவரின் இசையில் உருவான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஒட்டுமொத்தமாக அனைத்து வகையிலும் மிகச்சிறந்த இசையை வழங்கி 2019-ஆம் ஆண்டை அருமையாக கடந்திருக்கிறார். 2020-ஆம் ஆண்டிலும் அவரது வலிமையான இசைபயணம் இன்னும் அதிக மிடுக்குடன் வீரநடை போட காத்துகொண்டிருகிறது
2019-இல் அவர் கைதி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், ஜடா, அயோக்யா, கொரில்லா, கே13, 100 , தேவி 2 ஆகிய எட்டு படங்களுக்கு இசை அமைத்து இந்த ஆண்டில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்தவர் என்ற பெருமையை தன் வசம் வைத்து கொண்டார்!