ஸ்ரீமதி வசந்தா கண்ணன் தனது மகள் கல்கத்தா கே. ஸ்ரீவித்யா மற்றும் மகன் மோகன் கண்ணன் ஆகியோருடன் இணைந்து ஒரு தனித்துவமான தில்லானா இசையை வெளியிட்டிருக்கிறார்

410

புகழ்பெற்ற கர்நாடக வயலின் இசைக்கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் குருவான ஸ்ரீமதி வசந்தா கண்ணன் தனது மகள் மற்றும் சிஷ்யையான கல்கத்தா கே. ஸ்ரீவித்யா மற்றும் மகன் மோகன் கண்ணன் ஆகியோருடன் இணைந்து ஒரு தனித்துவமான தில்லானா இசையை வெளியிட்டிருக்கிறார்

மும்பை, 23 மார்ச் 2021: புகழ்பெற்ற கர்நாடக வயலின் இசைக்கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் குருவான ஸ்ரீமதி வசந்தா கண்ணன் தனது மகள் மற்றும் சிஷ்யையான கல்கத்தா கே. ஸ்ரீவித்யா மற்றும் மகன் மோகன் கண்ணன் ஆகியோருடன் இணைந்து ஒரு தனித்துவமான தில்லானா இசையை வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீமதி வசந்தா கண்ணன் மற்றும் கல்கத்தா கே.ஸ்ரீவித்யா, ஆகிய இருவரும் பாடவும் அத்தோடு வயலின் இசைக்கவும் செய்ய மற்றும் மோகன் கண்ணன் கிட்டார் இசைத்து இணைந்து பாடி ஆதரவளிக்கவும் அரங்கேறிய இந்த மூவரின் இசைப்படைப்பு அவையோருக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை அளித்தது.

கத்யுத காந்த்தி என்ற அபூர்வமான ராகத்தில், செவ்வியல் இசைப்படைப்புக்களிலயே முதல்முதலாக படைக்கப்பட்ட அறியப்பட்ட இசைப்படைப்பாக இது விளங்குகிறது.

பொதுவாக ஒரு இசைநிகழ்ச்சியின் இறுதியில் பாடப்படுகிற மற்றும் செவ்வியல் இந்திய

நடன நிகழ்ச்சிகளில் பரவலாக பயன்படுத்தப்படும் தில்லானா கர்நாடக இசை சந்தத்தின் ஒரு வடிவமாகும். ஜதிகளும், ஸ்வரங்களும் பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணத்தின் இறுதிப் பகுதியின் உள்ளடக்கங்களாகத் திகழுகின்ற அதே சமயத்தில், பாடல் வரிவடிவம் சரணத்தின் தொடக்க பகுதியாக இருக்கிறது.

ஸ்ரீமதி வசந்தா கண்ணனின் தில்லானா (கத்யுத காந்தி ராகம், ஆதி தாளம்) பாரம்பரிய வடிவத்தை பின்பற்றும் அதேசமயம், பெரும்பாலும் மேற்கத்திய மற்றும் பிரபல இசை வடிவங்களாக விளங்கும் கிட்டார் மற்றும் ஒத்திசைவை (Harmonies) கலந்து அளிக்கும் முற்போக்கு அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது,

மொத்தத்தில் தில்லானாவை பற்றி பேசுகையில், ஸ்ரீமதி வசந்தா கண்ணன் பகிர்ந்து கொள்கிறார், “என்னை வசியப்படுத்திய மதுரமான கத்யுத காந்தி என்ற ஆபூர்வமான ராகத்தை நான் ஆராய்ந்து கொண்டிருக்கையில் இந்த தில்லானா பற்றிய எண்ணம் என் மனதில் உதித்தது. நான் அறிந்த வரையில் இந்த ராகத்தில் எந்த ஒரு இசைக்கோவையும் இல்லாததால் ஆரோஹணம் மற்றும் அவரோஹணம் மூலம் அந்த ராகத்தின் அடிப்படை கட்டமைப்பை தில்லானா பாடல் வரிகளின் ஒரு பகுதியாகவே உருவாக்கினேன். இந்த இசைப்படைபின் சிறந்த வெளிப்பாடு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றும் இந்தத் தில்லானாவில் எனது குழந்தைகள் என்னுடன் இணைந்தது குறித்து எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.”

தனது தாயார், மற்றும் சகோதரனுடன் தான் இணைந்தது குறித்து பகிர்ந்து கொண்டு பேசுகையில், கல்கத்தா கே.ஸ்ரீவித்யா கூறினார், “ என்னுடைய தாயார் மற்றும் சகோதரனுடன் இணைந்து செய்த இது மிகவும் அற்புதமான, மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடிய ஒன்றாக அமைந்தது!. அம்மா இந்த முழு தில்லானாவையும் இரண்டே நாட்களில் உருவாக்கியதை நாங்கள் கண்டோம். தற்காலத்திய இந்த சூழலில் எங்களது இல்லத்திலேயே இந்த வடிவத்தில் இதை முழுமையாகக் கொண்டுவருவதற்கு அதை பதிவு செய்வதற்கு மற்றும் படம்பிடிப்பதற்காக நாங்கள் மூவரும் மேற்கொண்ட எண்ணிலடங்கா சம்பாஷணைகளோடு எங்களது மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களும் தொடங்கின!.”

தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பாடகரும் இசையமைப்பாளருமான மோகன் கண்ணன் கூறினார், “ உலகெங்கும் இருக்கும் இசை பிரியர்களுக்கு இன்னும் மகிழ்வைத் தரும், ஒரு தூய செவ்வியல் பாடல் ஒன்றில், என்னுடைய தாயார் மற்றும் சகோதரியுடன் இணைந்து இசைத்தது எனது வாழ்க்கையில் மிகவும் மனநிறைவைத் தருகிற ஒரு அனுபவமாக அமைந்தது. அதே சமயம் தில்லானாவின் இசையமைப்பு அல்லது ராகத்தின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் கிட்டார் மற்றும் ஒத்திசையை (Harmonies) அதில் உட்புகுத்தவும் செய்த முயற்சி இதை ஒரு சவாலாகவும் மட்டற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அமைத்தது.”

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com