வடபழனியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் ,காயத்ரி ரகுராம் 150 அரிசி மூட்டை வழங்கினார்கள் 

145
Header Aside Logo


கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர் …

இந்த நேரத்தில் துணிச்சலாக கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் ..

குறிப்பாக மொழி பேச தெரியாமல் உதவி பெற முடியாமல் தவித்த கேளம்பாக்கம் பர்மா அகதிகளுக்கும் ,தெலுங்கு மொழி பேசும் கட்டிட தொழிலாளர்களும் 250 மூட்டை அரிசி பைகளையும் மளிகை சாமான்களையும் வழங்கி அந்த மக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கி மிக பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார்கள் ..

நெல்லை மாவட்டத்தில் ரஜகை ஏழை எளிய மக்களுக்கும் 100 மூட்டை அரிசிகள் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது ….

தற்போது வடபழனியில் சாலிகிராமம் சுற்றுவட்டார ஓட்டுனர்களுக்கு கலப்பை மக்கள் இயக்கத்தின் PT செல்வகுமார் உதவிப்பொருட்களையும் மளிகை சாமான்களையும் வழங்கினார் ..

இந்த நற்பணியில் திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்
அவர் பேசியதாவது :இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவ்வளவு அழகாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து ,அதிலும் அன்றாடம் கஷ்டப்படும் ஆட்டோ ஓட்டும் கூலி தொழிலாளர்களை அவர்களுக்கு இன்று உதவி செய்தது ஒரு புண்ணியமான விஷயமாகும். கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் வெளியில் செல்ல வேண்டாம் என்று வீட்டில் கூட சொன்னார்கள் …ஆனால் இந்த நல்ல விஷயத்தை செய்யும் தருணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று துணிச்சலாக வந்தேன் ..இப்படி ஒரு உதவியை முன்னெடுத்து நடத்தும் கலப்பை மக்கள் இயக்கத்தினருக்கு மனதார பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்… அதன் பின்னர் பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் PT செல்வக்குமார் :

தமிழகத்தில் கொடுமையான வைரஸ் பரவிய பிறகும் சில குறிப்பிட்ட ஊர்களில் தெய்வத்திற்கு சமமான மருத்துவர்களை உள்ளே அனுமதிக்கமாட்டோம் என்று சொன்னவர்கள் உண்மையிலே மனிதநேயமற்ற அரக்கர்கள் ,அவர்களை தான் முதலில் இந்த அரசு ஒதுக்க வேண்டும் …இன்று இந்த ஆட்டோ ஓட்டுனர்களை கண்டுபிடித்து உதவி செய்தது கூட காரணம் என்னவென்றால் அன்றாட
வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் ,ஏழை ஆட்டோ ஓட்டுனர்கள் தினமும் டியூ ஆட்டோவுக்கு கெட்டியே வாழ்கிறார்கள் ..இதை பார்த்து இவர்களுக்கு ன்னும் நிறைய பேர் உதவ வேண்டும் என்ற எண்ணத்திலே செய்தோம் …
வடபழனியில் ஆட்டோ ஓட்டுனர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இவ்ளோ பேர் ஒரே இடத்தில் சங்கமித்தது பரபரப்பை ஏற்படுத்தியது ..தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது ..கலப்பை மக்கள் இயக்கத்தினரின் இந்த சேவையை அனைவரும் பாராட்டினார்கள் ..இந்த நிகழ்ச்சியில் மேற்கண்ட பணிகளுக்கு டபுள் மீனிங் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் உதவியாக இருந்தார்.. மற்றும் கலப்பை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், துணை தலைவர் நந்தகுமார், செந்தில் பி‌‌ரபு, ராஜ் குமார் கலந்து கொண்டார்கள். 💐💐💐

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com