#Nikhil20 படத்தின் தலைப்பு ‘சுயம்பு’ என வைக்கப்பட்டு, அதன் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது

Swayambhu”

நிகில் நடிப்பில் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோவின் #Nikhil20 படத்தின் தலைப்பு ‘சுயம்பு’ என வைக்கப்பட்டு, அதன் முதல் பார்வை தற்போது  வெளியாகியுள்ளது

நடிகர் நிகிலின் 20வது படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து, நிகிலின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.  #Nikhil20 படத்திற்கு கம்பீரமாக ‘சுயம்பு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

‘சுயம்பு’ என்றால் ‘தானாக பிறந்தது‘ அல்லது ‘தன் சொந்த விருப்பத்தால் உருவாக்கப்பட்டது’ என அர்த்தம். முதல் பார்வை போஸ்டரில் நிகில் போர்க்களத்தில் ஒரு மூர்க்கமான வீரராக உள்ளார். ஒரு வழக்கமான போர் வீரனைப் போல நீண்ட கூந்தலைக் கொண்டு, ஒரு கையில் ஆயுதம் (ஈட்டி) மற்றும் மற்றொரு கையில் கேடயத்துடனும் உள்ளார். இந்தப் படத்திற்காக அவரது  தோற்றம் குறிப்பிடத்தகுந்ததாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தயாரிப்பாளர்கள் முன்பு வெளியிட்டுள்ள மோஷன் போஸ்டரின்படி, இது ஒரு மில்லினியத்திற்கு முந்தைய கதை என்று தெரிவித்துள்ளனர். இது ஒரு தனி மனிதனின் காவியமாக, ஒரு பேரரசின் பொற்காலத் தொடக்கமாக உருவானதையும் கூறுகிறது. மேலும், நிகில் ‘தி லெஜண்டரி வாரியர்’ என்று இதில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

வெளியாகியுள்ள முதல் பார்வை மற்றும் கான்செப்ட் வீடியோ, இந்த புகழ்பெற்ற போர் வீரரின் காவிய படைப்பு மகத்தானதாக வெளிவர இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இந்தப் படத்திற்கு இப்போதிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை படக்குழு உருவாக்கி வருகிறது.

நிகிலின் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் ‘சுயம்பு’. இது சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கப்படுகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.

நடிகர்: நிகில்

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது,
இசை: ரவி பஸ்ரூர்,
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா,
வசனம்: வாசுதேவ் முனேப்பகரி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம் பிரபாகரன்,
இணை தயாரிப்பாளர்கள்: விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

 
 
 
 
 
 
 
 
 
"Swayambhu" movie"Swayambhu" Pre-look Poster#Nikhil20Nikhil
Comments (0)
Add Comment