தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
சற்றுமுன்..
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்காக திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக UP மஹாலில் கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவரையும் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி நேரடியாக அழைப்பு விடுத்தார். மேலும் கழக பொதுச்செயலாளர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.மதன், திரு.ஸ்டாலின், திரு.மணி, திரு.ஆனந்த, திரு.பூரணசந்திரன், திரு.ராஜா மற்றும் கழக தொண்டர்கள், தோழர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.