கலைஞர் தொலைக்காட்சியின் புத்தம் புதிய மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”

கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அறிவிப்பாக புத்தம் புதிய 2 நெடுந்தொடர்கள் வருகிற ஜூன் முதல் ஔிபரப்பாக இருக்கிறது. இதில் ஒன்று ப்ரீத்தி சஞ்ஜுவ், ராதிகா சரத்குமார் நடிக்கும் “பொன்னி C/O ராணி”. மற்றொன்று, மாளவிகா அவினாஷ், ஸ்வேதா கெல்ஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “கண்ணெதிரே தோன்றினாள்”. குடும்ப பந்தத்திற்கும், சதியினால் இடம் மாறும் தொப்புள் கொடி உறவுக்கும் இடையே நடக்கும் ஓர் வித்தியாசமான களத்தில் இதன் கதை நகர்கிறது.

அதன்படி, ருத்ராவின் வீட்டில் டிரைவராக வேலை பார்க்கும் ரத்னம் மனைவியும், ருத்ராவும் ஒரே இடத்தில், பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். இந்த குழந்தைகளை மாற்றி வைத்து சதி செய்கிறார் ரத்னம்.

இப்படி சதியினால் பிரியும் இந்த தொப்புள் கொடி உறவு மீண்டும் சேருமா? ரத்னமின் சதியை தாண்டி ருத்ராவும், சக்தியும் ஒன்று சேர்வார்களா? அதன் பின்னணியில் வரும் சிக்கல்கள் என்னென்ன? என்பதே தொடரின் விறுவிறுப்பான மீதிக்கதை.

இந்த தொடரில் ருத்ராவாக மாளவிகா அவினாஷும், சக்தியாக ஸ்வேதா கெல்ஜூம், ரத்னமாக சவுமியனும், ஜீவன், ஜெயஸ்ரீ, சீதா, கவிதா, கோவை பாபு, ரஞ்சித், பூஜா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நடிக்கிறார்கள்.

இந்த நெடுந்தொடர் வருகிற ஜூன் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

KalagnarTVKannethirey Thondrinal Mega Series
Comments (0)
Add Comment