Actress Varalaxmi Sarathkumar celebrates her Birthday with Cancer affected Children at the Institute of Child Health,Egmore

131

Actress Varalaxmi Sarathkumar, who is illustrious for getting involved in several philanthropic and social activities, celebrated her birthday in a meaningful way by spending time with cancer-affected children at the Institute of Child Health, Egmore in Chennai, through a special program ‘Joy of Sharing’ organized by  Save Shakti Foundation and Sankalp Beautiful World.

The event was addressed by actress Varalaxmi Sarathkumar and Dr. Vel Murugan H.O.D.

Actress Varalaxmi Sarathkumar said, “I feel happy to be spending this birthday meaningfully here with the saviours – Doctors, who have been doing a heart-touching job of saving many cancer patients. We all think about Cancer when some of our close and dear ones are affected by it.  We need not strain a lot or contribute something huge, but just Rs.10 can make a big difference in the lives of affected ones. I am emotional and elated to see that these cyclists, completed 1746 Km from Chennai to Kolkata to raise awareness for Cancer Care. I am so touched by the Sankalp and doctors for their life-saving gesture of curing many patients. It’s great to see many patients have been successfully operated, on and are returning to their normal lives. I request press and media channels to spread this news about cancer awareness, which will make a big difference in many lives.”

As a part of this program, actress Varalaxmi distributed groceries to the Cancer affected families and felicitated the cyclists who completed 1746 Km from Chennai to Kolkata to raise awareness on cancer care.

The Cyclist Awardees include Shiva Ravi – 26 years, Jay Aswani – 18 years, and Cyclothon Coordinator -Maneet Kulkarni- 18 years.

 

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பிறந்தநாளை ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடினார்

பல்வேறு தொண்டு மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார், சென்னை எழும்பூரில் உள்ள ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். ‘ஜாய் ஆஃப் ஷேரிங்’ என்ற இந்த நிகழ்வை, சேவ் சக்தி அறக்கட்டளை மற்றும் சங்கல்ப் பியூட்டிஃபுல் வேர்ல்ட் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார், டாக்டர் வேல் முருகன் ஆகியோர் பேசினர்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசுகையில், “புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத் தொடும் பணியைச் செய்து வரும் மீட்பர்களான மருத்துவர்களுடன் இந்த பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நெருங்கிய, அன்புக்குரியவர்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது மட்டுமே புற்றுநோய் குறித்து சிந்திக்கிறோம். இவர்களுக்கு நாம் எதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால், நாம் அதிகம் சிரமப்படவோ அல்லது பெரிய அளவில் ஏதாவது பங்களிக்கவோ தேவையில்லை. ஆனால், குறைந்தபட்சம் ரூ.10 கொடுப்பது கூட பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிள் பயணம் மேற்கொண்டு  முடித்தவர்களைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். நெகிழ்ச்சியாக உள்ளது. பல நோயாளிகளைக் குணப்படுத்தி, அவர்களின் உயிர்காக்கும் பணியில் உள்ள சங்கல்ப் மற்றும் மருத்துவர்கள் என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளனர். பல நோயாளிகள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பலரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இந்தச் செய்தியை அதிகம் பகிரும்படி பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நடிகை வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார் மற்றும் புற்றுநோய் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிளில் பயணித்து முடித்தவர்களைப் பாராட்டினார்.

சைக்கிளில் பயணித்தவர்களுக்கான  விருது பெற்றவர்களில் சிவ ரவி – 26 வயது, ஜெய் அஸ்வானி – 18 வயது மற்றும் சைக்ளோதான் ஒருங்கிணைப்பாளர் – மனீத் குல்கர்னி – 18 வயது ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com